உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஈ.டி., விரித்த வலையில் சிக்காமல் செந்தில்பாலாஜி தம்பி டிமிக்கி

ஈ.டி., விரித்த வலையில் சிக்காமல் செந்தில்பாலாஜி தம்பி டிமிக்கி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: அ.தி.மு.க., ஆட்சியில், போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, ஓட்டுனர், நடத்துனர், மெக்கானிக் வேலை வாங்கித் தருவதாக, 1.62 கோடி ரூபாய் பெற்று மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.'

லுக் அவுட்' நோட்டீஸ்

இது தொடர்பாக, அமலாக்கத்துறை அதிகாரிகள், செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் உள்ளிட்ட ஏழு பேர் மீது வழக்கு பதிந்துஉள்ளனர்.செந்தில் பாலாஜியை, ஜூன், 14ல் கைது செய்து, சென்னை புழல் சிறையில் அடைத்துள்ளனர். விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என, அசோக்குமாருக்கு நான்கு முறை, 'சம்மன்' அனுப்பினர்.ஒருமுறை கூட அவர் ஆஜராகவில்லை. ஒன்பது மாதங்களுக்கு முன், தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து, 'லுக் அவுட்' நோட்டீஸ் வழங்கினர்.அதன் பிறகும், அசோக்குமார் எங்கிருக்கிறார் என்பதைக் கூட, அமலாக்கத் துறை அதிகாரிகளால் துப்பு துலக்க முடியவில்லை. நேபாளத்திற்கு தப்பி விட்டதாகவும் கூறப்பட்டது.கடந்தாண்டு ஆகஸ்டில் பெங்களூரில் சிக்கினார் என, தகவல் வெளியானது. அதற்கு உடனடியாக செய்திக்குறிப்பு வெளியிட்டு மறுத்தனர்.எனினும் கைது நடவடிக்கையில் வேகம் காட்டாமல் உள்ளனர். செந்தில் பாலாஜி ஜாமின் மனு நிராகரிக்கப்பட்டு, 30 முறை காவல் நீட்டிப்பு செய்யப்பட்டு வரும் நிலையில், அசோக்குமாரை கைது செய்து விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

உடந்தை

இதுகுறித்து, செந்தில் பாலாஜி மற்றும் அசோக்குமாரால் பாதிக்கப்பட்ட நபர்கள் கூறியதாவது:பண மோசடிக்கு மூளையாக செயல்பட்டதே அசோக்குமார் தான். அவருக்கு உடந்தையாக, பினாமிகள் கார்த்திகேயன், சண்முகம் ஆகியோர் செயல்பட்டனர்.கரூரில், 25 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை, செந்தில் பாலாஜி, அசோக்குமார் ஆகியோர் கூட்டு சேர்ந்து, பினாமிகள் பெயரில், 10.88 லட்சம் ரூபாய்க்கு வாங்கி மோசடி செய்துள்ளனர்.இதற்கு அசோக்குமாரின் மனைவி, மாமியார் ஆகியோர் உடந்தையாக இருந்துள்ளனர். அவர்களின் வங்கி கணக்குகளை முடக்க வேண்டும். அசோக்குமாரை விரைந்து கைது செய்ய வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

ராமகிருஷ்ணன்
மார் 30, 2024 06:45

மிகவும் கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதித்த பணத்தில் பாட்டிலுக்கு 10 ரூபாய் அதிகமாக வாங்கிய பாவம் தான் பெரிய அணிலுக்கு ஜாமீன் கூட கிடைக்கவில்லை.


Kasimani Baskaran
மார் 30, 2024 05:46

வசூல் மெசின் வழக்கு நடந்தால் அவர் குற்றவாளி ஆகவே வழக்கு நடக்காமல் இருக்க என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதையெல்லாம் தயங்காமல் செய்வார்கள் பணத்தை பலருக்கு திரும்பக்கொடுத்தால் அதுதான் பணம் வாங்கியதற்கு அத்தாட்சி வேறு ஆதாரம் தேவையில்லை


JAYACHANDRAN RAMAKRISHNAN
மார் 30, 2024 05:21

மத்தியில் ஆட்சி மாற்றம் வரும் இன்னும் கொஞ்ச நாள் அட்ஜஸ்ட் செய்து கொண்டால் ஆட்சி பொறுப்பேற்ற முதல் கையெழுத்து மதிப்பிற்குரிய திருசெந்தில் பாலாஜி அவர்கள் விடுதலை மற்றும் அவர் மீதும் அவர் சகோதரர் மீது உள்ள வழக்குகளில் நிரபராதி என தீர்ப்பு பெறுவது தான் இலக்கு அப்பொழுது ED அதிகாரிகள் மீது வழக்கு தொடுத்து அவர்கள் சிறையில் அடைக்கப்படுவர் இதெல்லாம் நடக்க வேண்டும் என்று திரைக்கதை வசனம் எழுதி இயக்கி வருகிறார்கள் போல் தெரிகிறது அதில் எப்படியும் அமித்ஷா மற்றும் மோடி ஜெயிலில் இருப்பார்கள்


சுந்தர்
மார் 30, 2024 04:17

தமிழக போலீஸ் இன்னும் அவரை கண்டு பிடிக்க முடியவில்லை...


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை