உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மின் கட்டணம் விர்ர்ர்..!: இ.பி.எஸ்., அண்ணாமலை, சீமான் ‛‛ஷாக்!!

மின் கட்டணம் விர்ர்ர்..!: இ.பி.எஸ்., அண்ணாமலை, சீமான் ‛‛ஷாக்!!

சென்னை: தமிழகத்தில் வீடு, தொழிற்சாலை உட்பட அனைத்து பிரிவுகளுக்கும் மின் கட்டணம், 4.83 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. அந்த உயர்வு, இம்மாதம் 1ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. மின் கட்டணம் உயர்வுக்கு அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

தி.மு.க., அரசுக்கு பாடம்

அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மின் கட்டண உயர்வை தமிழக அரசு உடனே திரும்பப் பெற வேண்டும். லோக்சபா, இடைத்தேர்தல் முடிந்ததும் மக்கள் நெற்றியில் பட்டை நாமத்தைப் போட்டிருக்கிறார். தி.மு.க., அரசு 3ம் முறையாக மின் கட்டண உயர்வு என்ற ஒரு பேரிடியை மக்களின் தலையில் இறக்கியிருக்கிறது.https://www.youtube.com/embed/2L552dV70Coசொன்னதைச் செய்வோம், சொல்லாததையும் செய்வோம் என்ற நாடக வசனம் பேசிய ஸ்டாலின் ஆட்சிக்கு வந்தவுடன் மின் கட்டணத்தை உயர்த்தி சொல்லாததையும் செய்துவிட்டார். நம்மை கேள்வி கேட்க யாருக்கும் உரிமை இல்லை என்ற மமதையில் முதல்வர் ஸ்டாலின் தலைக்கனத்தோடு செயல்படுவாரேயானால், கொதிப்படைந்துள்ள தமிழக மக்கள் திமுக அரசுக்கு தக்க பாடத்தை புகட்டுவார்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

திராவிட மாடல் அரசு

தமிழக பா.ஜ, தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகளில், சொத்து வரி, மின்சாரக் கட்டணம், குடிநீர் கட்டணம், பால் விலை, பத்திரப் பதிவு கட்டணம், என அனைத்தையும் பல மடங்கு உயர்த்தி, கட்டண உயர்வைப் பொதுமக்கள் தலையில் சுமத்தியுள்ள திமுக அரசு, தற்போது, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் முடிவுகள் வெளிவந்ததும், மீண்டும் ஒரு முறை மின் கட்டணத்தை உயர்த்தி, பொதுமக்களுக்கு அதிர்ச்சி அளித்திருக்கிறது.

ஷாக் கொடுத்து விட்டார் ஸ்டாலின்

அடிப்படை நிர்வாக அறிவு கூட இல்லாத, முட்டாள்தனமான மாடலாக இருக்கிறது திமுகவின் திராவிட மாடல் அரசு. எதிர்க்கட்சியாக இருந்தபோது, ஷாக் அடிக்கும் மின் கட்டணம் என்றெல்லாம் பேசிய ஸ்டாலின் தற்போது பொதுமக்களுக்குத் தொடர்ந்து ஷாக் கொடுத்து வருகிறார். திமுகவின் நிர்வாகத் தோல்விக்காக, பொதுமக்கள் மீது கட்டண உயர்வைச் சுமத்துவது எந்த விதத்தில் நியாயம்?. இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.

பச்சைத்துரோகம்

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அனைத்துத் தரப்பு மக்களையும் கடுமையாகப் பாதிக்கும் மின்கட்டண உயர்வினை திமுக அரசு உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும். அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது மேலும் ஒரு பேரிடியாக மின்கட்டணத்தை உயர்த்தும் திமுக அரசின் முடிவு வன்மையான கண்டனத்துக்குரியது. லோக்சபா தேர்தலிலும், இடைத்தேர்தலிலும் வென்ற பிறகு தந்திரமாக மின்கட்டணத்தை உயர்த்தும் திமுக அரசின் முடிவு ஓட்டளித்த மக்களுக்குச் செய்கின்ற பச்சைத்துரோகமாகும். இவ்வாறு சீமான் கூறியுள்ளார்.

வெந்த புண்ணில் வேல் பாய்ச்சல்

மின் கட்டண உயர்வை தி.மு.க., அரசு மீண்டும் உயர்த்தி இருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் செயல். இதனால் அத்தியாவசிய பொருட்கள், கட்டுமானப் பொருட்கள் என அனைத்துப் பொருட்களின் விலையும் உயரும். தி.மு.க., அரசின் இந்த நடவடிக்கை மக்கள் விரோத செயல் என முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 22 )

kulandai kannan
ஜூலை 16, 2024 18:55

கட்டணத்தை உயர்த்திய அதே சமயம் இலவச மின்சாரத்தை நிறுத்தினால் வரவேற்கலாம்.


Kumar Kumzi
ஜூலை 16, 2024 15:21

கல்லலகுறிச்சியில் பத்து லட்சம் ஓவா விக்கிரவாண்டி தேர்தலுக்கு சிலவழிச்ச ரெண்டாயிரம் ஓவாவ வேற எப்படி வசூலிக்கிறது....


Kumar Kumzi
ஜூலை 16, 2024 15:13

ஓசிகோட்டருக்கும் ஓவாவுக்கும் ஓட்டு போட்டிங்களே அனுபவிங்கடா


R S BALA
ஜூலை 16, 2024 13:58

சாவடிக்காதிங்க மக்களை ..


RAMAKRISHNAN NATESAN
ஜூலை 16, 2024 13:54

இப்போது பாய்ந்து குதறும் அரசியல்வாதிகள் கட்டணக்குறைப்பு, நூறு யூனிட் வரை இலவசம் என்றெல்லாம் அறிவிப்புகள் வந்தபொழுது என்ன செய்தார்கள்


RAMAKRISHNAN NATESAN
ஜூலை 16, 2024 13:52

பொதுவாச் சொல்றேன் ஒன்றியம், குன்றியம் ரெண்டையும் சேர்த்துதான் .... குதிரை கொள்ளு ன்னா வாயைத் திறக்குமாம் ...... கடிவாளம் ன்னா வாயை மூடிக்குமாம் .....அதேமாதிரிதான் மக்களும் ...... இலவசம், தள்ளுபடி, கட்டணக்குறைப்பு ன்னா ஆஹா ஆஹா ன்றாங்க ..... கட்டணம் கூடுதல், வரி ன்னா எரிச்சல் ஆகறாங்க ......


RAAJ68
ஜூலை 16, 2024 13:46

காத்திருங்கள் அடுத்தார் போன்று பால் விலை உயர்வு பஸ் கட்டணம் உயர்வு எல்லாம் வரும்.


MADHAVAN
ஜூலை 16, 2024 13:03

தமிழக அரசை குறைகூறும் எடப்பாடி, அண்ணாமலை, ஓ பி எஸ் எல்லோரும் காஸ் விலை பெட்ரோல் விலை அன்றாடம் உபயோகிக்கும் உணவுதானியவிலை எல்லாம் மத்திய அரசு உயர்த்தியபோது கோமாவில் இருந்தீர்களா ?


ஆரூர் ரங்
ஜூலை 16, 2024 13:17

உணவு தானியங்களை மத்திய அரசு இலவசமாக கொடுக்கிறது. வாங்கும் விடியல் அரசு அதில் ஸ்டிக்கர் ஒட்டுகிறார்கள். விவசாயம் மாநில அரசின் பொறுப்பில்தான் உள்ளது.


R S BALA
ஜூலை 16, 2024 13:52

வந்துட்ட முட்டுக்கொடுக்க..


Sivak
ஜூலை 16, 2024 17:57

மின்சார கட்டணத்தை ஏத்திட்டாங்கடா... மூளை இருக்கா.. ஏதாவது புரியுதா?


Lion Drsekar
ஜூலை 16, 2024 12:39

விழலுக்கு இறைத்த நீர் வந்தே மாதரம்


Palanisamy
ஜூலை 16, 2024 12:39

மகளிர் உரிமைத் தொகை, இலவச பேருந்து பயணம், காலை சிற்றுண்டி இதெல்லாம் வழங்கப்படுகிறது.இவைகளுக்கு ஆகும் செலவை ஈடுகட்ட மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.ஆகவே மின்கட்டணம் உயர்வை பொருட்படுத்த வேண்டாம்


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை