உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பேராசிரியர் பணிக்கு ஆண்டுக்கு இருமுறை தேர்வு

பேராசிரியர் பணிக்கு ஆண்டுக்கு இருமுறை தேர்வு

சென்னை: 'கலை, அறிவியல் கல்லுாரிகளுக்கு, உதவி பேராசிரியர்களை தேர்வு செய்வதற்காக, தமிழக அரசால் நடத்தப்படும் தகுதி தேர்வான, 'செட்' தேர்வு, இனி ஆண்டுக்கு இரண்டு முறை நடத்தப்படும்' என, ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:

தற்போது நடத்தப்பட்டுள்ள தேர்வுகளுக்கான முடிவுகள், விரைவில் வெளியிடப்பட்டு, ஜூன் மாதம் 4,000 உதவி பேராசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும். அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு, ஆண்டுக்கு இரண்டு முறை, 'செட்' தேர்வு நடத்தி, உதவி பேராசிரியர் காலியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை