உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / போக்குவரத்து விதிமுறையில் டாக்டருக்கு விதிவிலக்கு:ஐகோர்ட்

போக்குவரத்து விதிமுறையில் டாக்டருக்கு விதிவிலக்கு:ஐகோர்ட்

சென்னை : 'வாகனங்களில் டாக்டர் என ஸ்டிக்கர்' ஒட்டியிருக்கும் டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது' என, சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.வாகனங்களில், 'காவல் துறை, அரசு, ஊடகம், வழக்கறிஞர், டாக்டர் என ஸ்டிக்கர் ஒட்டக் கூடாது; மீறினால் அபராதம் விதிக்கப்படும்' என, சென்னை போக்குவரத்து போலீசார் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.இந்த அறிவிப்பில் இருந்து, டாக்டர்களுக்கு விலக்களிக்க கோரி, தமிழ்நாடு மருத்துவர்கள் நல சங்கத்தின் பொது செயலர் டாக்டர் கே.சீனிவாசன் சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.பி.பாலாஜி, ''மருத்துவ அவசரத்துக்காக செல்லும் டாக்டர்களுக்கு ஸ்டிக்கர் ஒட்ட விலக்கு அளிக்கலாமே? வழக்கறிஞர்களுக்கு பார் கவுன்சில் ஸ்டிக்கர் வழங்குவது போல, டாக்டர்களுக்கும் வழங்குவது குறித்து, தேசிய மருத்துவ கமிஷனிடம் கருத்து கேட்கலாமே,'' என்றார்.அதற்கு, 'தேசிய மருத்துவ கமிஷனையும் வழக்கில் இணைக்க வேண்டும்' என, அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.இதையடுத்து, தேசிய மருத்துவ கமிஷன் மற்றும் தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலையும் வழக்கில் சேர்க்கும்படி மனுதாரருக்கு உத்தரவிட்ட நீதிபதி, வழக்கை ஜூன் 14க்கு தள்ளிவைத்தார். மேலும், 'அதுவரை வாகனங்களில் டாக்டர் என ஸ்டிக்கர் ஒட்டியிருந்தால் நடவடிக்கை எடுக்கக் கூடாது. இது இடைக்கால உத்தரவு; தேசிய மருத்துவ கமிஷன் வாதத்தை கேட்ட பின், வழக்கில் இறுதி உத்தரவு பிறப்பிக்கப்படும். 'ஸ்டிக்கரை டாக்டர்கள் தவறாக பயன்படுத்தினாலோ அல்லது டாக்டர் ஸ்டிக்கர் ஒட்டி இருக்கும் வாகனங்கள் சந்தேகிக்கும் முறையில் இருந்தாலோ, போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கலாம். 'வாகனத்தின் முன் பக்கம் அல்லது பின் பக்கம் மட்டுமே ஸ்டிக்கர் ஒட்டியிருக்க வேண்டும். நம்பர் பிளேட் உள்ளிட்ட இடங்களில் ஒட்டியிருந்தால் நடவடிக்கை எடுக்கலாம்' என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Kasimani Baskaran
மே 23, 2024 10:30

அரசே கியூஆர் கோடு ஸ்டிக்கர் கொடுத்து மருத்துவர்களின் வாகனங்களுக்கு முன்னுரிமை கொடுக்கலாம் சரியான நேரத்தில் மருத்துவர் செல்லவேண்டிய இடத்துக்கு செல்லவில்லை என்றால் அவசர காலப்பணிகளை சரியாக மேற்கொள்ள முடியாது, உயிர் காக்கும் பணியில் கூட சிக்கல் வரலாம் சாராய வாகனங்களுக்கே அவசரம் என்று போடும் பொழுது மருத்துவர் வாகனத்தின் மீது அவசரம் என்று போடுவதில் என்ன தவறு இருக்க முடியும்? நீதித்துறைக்கோ அல்லது வேறு துறைக்கோ முன்னுரிமை கொடுக்க வேண்டியது இல்லை


GMM
மே 23, 2024 10:29

போலீஸார் எந்த அறிவிப்பும் வெளியிட முடியாது அவர்கள் உத்தரவை செயல் படுத்த மட்டும் தான் போக்குவரத்தில் அரசு டாக்டர் போன்ற அவசர பணிக்கு வழிவிட வேண்டியது ஊர் சுற்றும் நபர்கள் ஆக டாக்டர், ஊடக, போலீசார், அரசு gazetted அவசர அதிகாரிகள் போன்றவர்களுக்கு தனி அடையாளம் தனியார், டெலிவரி, ஊர் சுற்றும் நபர்களுக்கு தனி அடையாளம் தேவை இதனை போக்குவரத்து துறை கட்டண அடிப்படையில் வழங்க வேண்டும் பணியில் உள்ள மத்திய, மாநில அரசு டாக்டர், அரசு அதிகாரிகள் மீது நேரடியாக பொலிஸார் நடவடிக்கை எடுக்க எந்த அதிகாரம் இல்லை அனுமதித்தால் பேரம் பேச, அதிகார துஷ்பிரயோகம் செய்ய வழிவகுக்கும் அரசு துறை தலைவர் ஒப்புதல் பெற வேண்டும் வழக்கறிஞர் பணி அவசர, அத்தியாவசிய பணி கிடையாது? அவர்களுக்கு விலக்கு அளிக்க தேவையில்லை? இதனை நடைமுறை படுத்தும் போது, போலீசார் எளிதில் குற்றவாளிகளை கண்காணிக்க முடியும்


Siva
மே 23, 2024 10:13

டாக்டர் சேவை பணி செய்தால் நன்றாக இருக்கும்


ஆரூர் ரங்
மே 23, 2024 09:53

எவ்வித உபகரணங்களும் வைத்துக் கொள்ளாமல் குடும்பத்துடன் உல்லாசப் பயணம் செல்லும் போதும் ஸ்டிக்கர் எதற்கு?.அவசர சிகிச்சைக்கு பயிற்சி பெறாத நாட்டு மருத்துவர் கூட ஸ்டிக்கர் ஒட்டலாமா?


Bala Iyer
மே 23, 2024 09:07

ஆங்கில எழுத்தாளர் ஜார்ஜ் ஆரவெல் அவரின் புகழ் பெற்ற நாவலில் " எல்லோரும் சமம், ஆனால் ஒரு சிலர் மற்றவர்களை விட அதிக சமம்" என்று கூறினார் அது போல, டாக்டர்கல் மட்டும் எப்படி? எந்த டாக்டர் அவசரத்தில் நோயாளிக்காக பயணம் செய்கிறார்? எல்லாம் மக்களை ஏமாற்றும் வேலை


மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி