உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஏப்.15 வரை செந்தில் பாலாஜி காவல் நீட்டிப்பு

ஏப்.15 வரை செந்தில் பாலாஜி காவல் நீட்டிப்பு

சென்னை:சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைதான செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை, 31வது முறையாக நீட்டித்து, சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில், கடந்தாண்டு ஜூனில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை, அமலாக்கத்துறை கைது செய்தது. ஜாமின் கேட்டு, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம், உயர் நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. ஜாமின் கேட்டு, உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு நிலுவையில் உள்ளது. தற்போது புழல் மத்திய சிறையில் உள்ள செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நேற்றுடன் நிறைவு பெற்றது.இதையடுத்து, புழல் சிறையில் இருந்து, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, மாவட்ட 3வது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி டி.வி.ஆனந்த் முன், நேற்று பிற்பகல் செந்தில் பாலாஜி ஆஜர்படுத்தப்பட்டார். பின், அவரின் நீதிமன்ற காவலை, 31வது முறையாக ஏப். 15 வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார். இதே போல, அமலாக்கத்துறை வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரிய மனு மீது மீண்டும் வாதிட அனுமதி கேட்டு, செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்த மனுவும் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த மனுவுக்கு அமலாக்கத்துறை தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.இதையடுத்து, விசாரணையை ஏப்.15க்கு தள்ளிவைத்து நீதிபதி டி.வி.ஆனந்த் உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை