மேட்டுப்பாளையம்: 'தி.மு.க., எப்போதெல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ, அப்போதெல்லாம் தமிழகத்தில், பஞ்சம், குடிநீர் பிரச்னை ஏற்படுகிறது' என மத்திய அமைச்சர் எல்.முருகன் பேசினார். தேசிய ஜனநாயகக் கூட்டணி நீலகிரி தொகுதி பா.ஜ., வேட்பாளரும், மத்திய அமைச்சருமான எல்.முருகன், மேட்டுப்பாளையம் தொகுதியில், தேர்தல் பிரசாரத்தை துவக்கினார். அப்போது அமைச்சர் எல். முருகன் பேசியதாவது: https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=glmaqcqw&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0கடந்த பத்து ஆண்டுகளில் பிரதமர் மோடி, சிறப்பான ஆட்சியும், நிர்வாகமும் செய்ததால், நாட்டின் வளர்ச்சி மிக வேகமாக வளர்ந்து வருகிறது. ஏழை எளிய மக்கள், 25 கோடி பேர் நடுத்தர மக்களாக உயர்ந்துள்ளனர். தி.மு.க., அரசு, திட்டங்களை முறையாக செயல்படுத்தாததால் தான், குடிநீர் பிரச்னையால் மக்கள் அவதிப்படுகின்றனர். எப்போதெல்லாம் தி.மு.க., ஆட்சிக்கு வருகிறதோ, அப்போதெல்லாம் நாட்டில் பஞ்சமும், குடிநீர் பிரச்னையும் நிலவுகிறது. ஊழல்வாதிகள், கட்டப்பஞ்சாயத்து தான் தி.மு.க.,. மக்கள் தேசியத்தையும், தெய்வீகத்தையும் நம்புகிறவர்கள். இப்படி ஒரு பக்கம் ஊழல் செய்தார் என்றால், இன்னொரு பக்கம், கடவுள் இல்லை எனவும், சனாதானத்தை வேரறுப்போம் எனவும், தாய்மார்களையும், சகோதரிகளையும் கொச்சைப்படுத்தி, ராஜா பேசி உள்ளார். வரும் தேர்தலில் பா.ஜ.,வுக்கு தாமரை சின்னத்தில் ஓட்டு போட வேண்டும். இவ்வாறு எல்.முருகன் பேசினார்.