உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 2 பேர் உயிரிழப்பு

பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 2 பேர் உயிரிழப்பு

விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மாயத்தேவன்பட்டியில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் இருவர் உயிரிழந்தனர்.விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மாயத்தேவன்பட்டியில் பட்டாசு ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு இன்று (ஆகஸ்ட் 14) காலை 9:45 மணிக்கு லாரியில் இருந்து ரசாயனப் பொருட்களை இறக்கி வைத்த போது வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் நாக பாளையத்தைச் சேர்ந்த புலிக் குட்டி, 45, குன்னூரை சேர்ந்த கார்த்திக் ,35, ஆகிய இருவர் உயிரிழந்தனர். மீட்பு படையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Mani . V
ஆக 15, 2024 04:51

பாவம் இவர்கள். கள்ளச் சாராயம் குடித்து செத்து இருந்தாலாவது ஒரு பத்து லட்சம் கிடைத்திருக்கும்.


Ramesh Sargam
ஆக 14, 2024 11:46

இது என்ன முதல் விபத்தா தமிழகத்தில், அதுவும் ஒரு பட்டாசு உட்பத்தி இடத்தில்? எத்தனையோ இதற்கு முன்பு நடந்திருக்கிறது? அரசு கொஞ்சமாவது இதுபோன்ற விபத்துக்களை தடுக்க, உயிர்களை காக்க நடவடிக்கை எடுத்திருக்கிறதா? இல்லை. ஆனால் ஒன்று இறந்தவர்களின் குடும்பத்தின் வாக்குகளை அள்ளிட லட்சக்கணக்கில் நிவாரணம் கொடுத்துவிடுவார்கள். திமுக அரசு மக்களின் நலனில், உயிரின்மீது ஒரு சொட்டு அக்கறையும் காட்டுவதில்லை.


மேலும் செய்திகள்









புதிய வீடியோ