மேலும் செய்திகள்
பள்ளி பேருந்து சக்கரத்தில் சிக்கி 4 வயது குழந்தை பலி
1 hour(s) ago
ராமேஸ்வரம் : நாகை மீனவர் படகு மோதியதில் இலங்கை கடற்படை வீரர் உயிரிழந்ததன் எதிரொலியாக ராமேஸ்வரம் மீனவர்கள் இந்திய எல்லையை தாண்டி மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என மீன்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.நேற்று முன்தினம் இரவு வங்கக்கடலில் மீன்பிடித்த நாகை மீனவர்கள் படகு இலங்கை கடற்படை ரோந்து படகு மீது மோதியதில் இலங்கை கடற்படை வீரர் ரத்நாயக் கடலில் மூழ்கி உயிரிழந்ததாக இலங்கை கடற்படையினர் தெரிவித்தனர். இச்சம்பவம் எதிரொலியாக பாக்ஜலசந்தி, மன்னார் வளைகுடா கடலில் மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்கள் அச்சத்தில் உள்ளனர்.நேற்று மாலை ராமேஸ்வரம் மீன்துறை உதவி இயக்குனர் அப்துல் காதர் ஜெயிலானி கூறியதாவது: ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் மீனவர் அடையாள அட்டை, ஆதார் கார்டு நகலை கடலுக்கு எடுத்து செல்ல வேண்டும். ஆதார் நகலை மீன்துறை அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். மீனவர்கள் இந்திய கடல் எல்லையை தாண்டி மீன்பிடிக்க செல்லக்கூடாது என்றனர்.
1 hour(s) ago