உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரூ.1.11 கோடி வெளிநாட்டு கரன்சி பறிமுதல்

ரூ.1.11 கோடி வெளிநாட்டு கரன்சி பறிமுதல்

சென்னை:சென்னையில் இருந்து தாய்லாந்து தலைநகர் பாங்காக் செல்லும் பயணியர் விமானம் கடந்த 6ம் தேதி புறப்படதயாராக இருந்தது.அதில் பயணிக்க சுற்றுலா விசாவில் வந்த இருவரை சந்தேகத்தில் சோதனை செய்தனர். அவர்களின் சூட்கேஸ்களில் ரகசிய அறை அமைத்து கட்டுக்கட்டாக அமெரிக்க டாலர் மற்றும் சவுதி ரியால் வைத்திருந்தது தெரியவந்தது. அதன் இந்திய மதிப்பு 1.1 கோடி ரூபாய். இதையடுத்து இருவரின் பயணத்தை அதிகாரிகள் ரத்து செய்தனர். அவர்களுக்கு சட்டவிரோத ஹவலா கும்பலுடன் தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் சுங்க அதிகாரிகள் விசாரித்துவருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

raja
ஜூலை 11, 2024 06:44

பெயர் தெரியாத மர்ம நபர்கள் என்று போட்டு இருந்தால் வாசகர்கள் புரிந்து கொண்டு இருப்பார்கள்.....போடவில்லை என்றாலும் புரிந்து கொண்டார்கள்...


மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி