உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மாஜி., எஸ்.எஸ்.ஐ.,க்கு 2 ஆண்டுகள் சிறை

மாஜி., எஸ்.எஸ்.ஐ.,க்கு 2 ஆண்டுகள் சிறை

கடலுார்: விபத்தில் சிக்கிய காரை விடுவிக்க லஞ்சம் வாங்கிய முன்னாள் சிறப்பு சப் இன்ஸ்பெக்டருக்கு, கடலுார் கோர்ட்டில் 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.புதுச்சேரி மாநிலம், காரைக்கால் வள்ளல் சீதக்காதி வீதியைச் சேர்ந்தவர் ஹமீது மரிக்கார்,54; இவர், கடந்த 2013ம் ஆண்டு பிப்., மாதம் பரங்கிப்பேட்டையில் இருந்து காரைக்கால் நோக்கி காரில் சென்றபோது, கடலுார் மாவட்டம், கிள்ளை அருகே கார் விபத்தில் சிக்கியது. விபத்தில் சிக்கிய காரை விடுவிக்க கிள்ளை போலீஸ் நிலையத்தில் அப்போது சிறப்பு சப் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்த உதயகுமார்,63; ஹமீது மரிக்காரிடம் 2,500 ரூபாய் லஞ்சம் கேட்டார்.இதுகுறித்து ஹமீது மரிக்கார், கடலுார் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். போலீசாரின் அறிவுரைப்படி அதே மாதம் 27ம் தேதி, போலீஸ் ஸ்டேஷனில் ரசாயனம் தடவிய 2,500 ரூபாயை உதயகுமாரிடம் கொடுத்தார். அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், உதயகுமாரை கைது செய்தனர். இதையடுத்து அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.இவ்வழக்கு விசாரணை கடலுார் தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி நாகராஜன், லஞ்சம் வாங்கிய உதயகுமாருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை