மேலும் செய்திகள்
100 நாள் வேலை திட்ட பெயரை மாற்ற பழனிசாமி எதிர்ப்பு
5 minutes ago
ஆபரண தங்கம் சவரனுக்கு ரூ.400 உயர்வு
2 hour(s) ago
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் வெளியிட்ட அறிவிப்பு:ரவுடி சீர்காழி சத்யாவுக்கு கள்ளத்துப்பாக்கி வழங்கிய வழக்கில், செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரத்தை சேர்ந்த வழக்கறிஞர் டி.அலெக்ஸ் சுதாகர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.இதேபோல, திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையை சேர்ந்த ஆர்.ஜிம், திருவள்ளூர் மாவட்டம் மேற்கு அண்ணா நகர் விரிவாக்க பகுதியை சேர்ந்த கே.சரவணன், சென்னை மயிலாப்பூரை சேர்ந்த எஸ்.ஐ.சேதுபதிபாண்டியன் ஆகியோருக்கு எதிராக, கொலை, கொலை முயற்சி, போதைப்பொருள் கடத்தல் போன்ற குற்ற வழக்குகள் உள்ளன.எனவே, இவர்கள் வழக்கறிஞர் தொழில் செய்ய தடை விதிக்கப்படுகிறது. குற்றச்சாட்டுக்கு ஆளான வழக்கறிஞர்கள், நாட்டில் உள்ள அனைத்து நீதிமன்றங்கள், தீர்ப்பாயங்கள் உள்ளிட்டவைகளில் ஆஜராகவும் தடை விதிக்கப்படுகிறது.கன்னியாகுமரி மாவட்டம், அஞ்சுகிராமம் பகுதியை சேர்ந்தவர்களான பி.எம்.பாசில் மற்றும் பி.வில்லியம் ஆகியோர் மீதான பார் கவுன்சிலின் நடவடிக்கை திரும்பப் பெறப்படுகிறது. இவர்கள் இருவரும் வழக்கம் போல வழக்கறிஞர் தொழில் செய்யலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
5 minutes ago
2 hour(s) ago