பாடகி பெயரில் மோசடி முயற்சி
சென்னை:இந்தியாவின் முன்னணி திரைப்பட பாடகி ஸ்ரேயா கோஷல். இவர், தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழிகளில், 1,000த்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடி உள்ளார்.இந்நிலையில், மாநில சைபர் குற்றப்பிரிவு தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கை: ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்தை பயன்படுத்தி, பாடகி ஸ்ரேயா கோஷல், 'ஆன்லைன்' விளையாட்டை ஊக்கப்படுத்தி பேசுவது போல விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.ஆன்லைன் விளையாட்டு மோசடி கும்பல், பாடகியின் படம் மற்றும் பெயரை பயன்படுத்தி, மோசடி செய்ய முயற்சித்து வருகிறது. மோசடி விளம்பரத்தை நம்ப வேண்டாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.