உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பணம் பறிக்கும் முயற்சியில் இலவச லேப்டாப் வதந்தி

பணம் பறிக்கும் முயற்சியில் இலவச லேப்டாப் வதந்தி

சென்னை : தமிழக மாணவர்களுக்கு பாகிஸ்தான் பிரதமர் இலவசமாக லேப்டாப் தருவதாக பரவி வரும் 'வாட்ஸ் ஆப்' புரளியை யாரும் நம்ப வேண்டாம்' என அறிவுறுத்தப்பட்டுள்ளது.பிரதம மந்திரி லேப்டாப் திட்டம் 2024' என்ற பெயரில் 'வாட்ஸ் ஆப்' தளத்தின் வாயிலாக லிங்க் பகிரப்பட்டு வருகிறது. இதில் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள தனிநபர்கள் சொந்தமாக லேப்டாப் வாங்க இயலவில்லை என்றால் அவர்களின் வாழ்க்கை மேம்பட இலவசமாக லேப்டாப் வழங்கப்படுகிறது. இதற்கான காலக்கெடு ஏப்.30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது' என கூறப்பட்டுள்ளது.இதுகுறித்து இ-கவர்னன்ஸ் சர்வீசஸ் இந்தியா லிமிடெட் மாநில தலைமை அதிகாரி வினோத் குரியகோஸ் கூறுகையில் ''பொது சேவை மையம் போன்ற பெயரில் உலா வரும் போலியான குழு அல்லது நபர்களின் மூலம் பெறப்படும் எந்த ஒரு சேவைக்கும் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம். ''எந்த ஒரு செயலியையும், லிங்க்கையும் க்ளிக் செய்ய வேண்டாம். யாருக்கும் பகிர வேண்டாம். அதில் எக்காரணத்தை கொண்டும் உங்கள் தகவல்களை தர வேண்டாம்'' எனகேட்டுக் கொண்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Ramesh Sargam
ஏப் 26, 2024 20:06

மக்கள் சிந்திக்க வேண்டும் பாக்கிஸ்தானில் உள்ளவர்களுக்கே ஒரு வேலை சாப்பாட்டுக்கே பெரிய பிரச்சினை அப்படி இருக்கையில் அந்த நாட்டு பிரதமர் எப்படி இப்படி ஒரு அறிக்கை விடமுடியும்? இது நம் திமுக கழக கண்மணிகள், தமிழகத்தில் உள்ள அந்த அமைதி மார்க்கத்தினருடன் சேர்ந்து செய்யும் ஏதோ ஏமாற்று வேலை


Rajathi Rajan
ஏப் 26, 2024 15:50

மோடி நம்ம நாட்டுக்கு பிரதமர் இல்லையா ? பாகிஸ்தானிக்கு தான் பிரதமரா? தினமலர் ன் அறிய கண்டுபிடிப்பு சூப்பர் எடிட்


M.S Balamurugan
ஏப் 26, 2024 13:36

பாகிஸ்தான் பிரதமர் னு அதுல போடவே இல்லையே நீயே சேர்த்துக்கிட்ட ம்ம்ம்


அப்புசாமி
ஏப் 26, 2024 07:57

இலவசமா வதந்திகளை மட்டுமே தரும் ஒரே அரசு.


R Kay
ஏப் 26, 2024 14:29

நோகாமல் நுங்கு சாப்பிட கையேந்தும் டாஸ்மாக் குன்றிய ...


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை