உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அடிக்கடி விசிட் அடிக்கும் முதலைகள்; சிதம்பரம் சுற்றுவட்டாரத்தில் மக்கள் பீதி

அடிக்கடி விசிட் அடிக்கும் முதலைகள்; சிதம்பரம் சுற்றுவட்டாரத்தில் மக்கள் பீதி

சிதம்பரம் : சிதம்பரத்தில் தோட்டத்து வீட்டிற்குள் புகுந்த மெகா சைஸ் முதலையை பார்த்து, வீட்டில் இருந்தவர்கள் ஓட்டம் பிடித்தனர். வனத்துறையினர் முதலையை பிடித்து, வக்காரமாரி ஏரியில் பாதுகாப்பாக விட்டனர்.கடலுார் மாவட்டம், சிதம்பரம் அருகே கொள்ளிடம் ஆற்றில் ஏராளமான முதலைகள் உள்ளன. அவை, கொள்ளிடத்தில் இருந்து பிரியும் கிளை வாய்க்கால்கள் வழியாக, அவ்வப்போது வெளியேறி, அருகில் உள்ள கிராமங்களுக்குள் புகுந்து விடுகின்றன.முதலைகள், சில நேரங்களில் ஆற்றில் குளிக்கச் செல்லும் பொதுமக்களை கடித்து, இழுத்துச் செல்வதும், கால்நடைகளை விழுங்குவதும் வாடிக்கை.அப்படி ஊருக்குள் புகும் முதலைகளை வனத்துறையினர் பிடித்து, சிதம்பரத்திற்கு குடிநீர் வழங்கும் வக்காரமாரி ஏரியில் விடுகின்றனர். அந்த வகையில், சிதம்பரம் அருகே அம்மாப்பேட்டை கிராமத்திற்குள் நேற்று முன்தினம் நள்ளிரவு, 1:00 மணியளவில் 13 அடி நீளமும், 550 கிலோ எடையும் கொண்ட மெகா சைஸ் முதலை ஒன்று புகுந்தது.முதலை, தோப்பு தெருவில் சம்பந்தமூர்த்தி என்பவரது தோட்டத்து வீட்டிற்குள் புகுந்து, அங்கு கட்டியிருந்த கால்நடைகளை கடிக்க முயன்றது. முதலையை பார்த்து, மாடு, கன்றுக்குட்டிகள் அபயக்குரல் எழுப்ப, திடுக்கிட்டு எழுந்த சம்பந்தமூர்த்தி குடும்பத்தினர், தோட்டத்திற்கு சென்று பார்த்தனர்.அப்போது, அங்கு மெகா சைஸ் முதலை இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து, வீட்டில் இருந்தவர்கள் ஓட்டம் பிடித்தனர். பின்னர், கிராமத்தினர் அங்கு திரண்டனர். வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.சிதம்பரம் வனச்சரகர் வசந்த் தலைமையிலான வனத்துறையினர், நீண்ட நேரம் போராடி முதலையை லாவகமாக பிடித்தனர். அந்த முதலை பாதுகாப்பாக வக்காரமாரி ஏரியில் விடப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

எவர்கிங்
பிப் 25, 2025 17:53

இனி முதலைகள் மக்களுக்கு தொல்லை கொடுத்தால் ஆமைக்கறியார் வசம் ஒப்படைக்க வேண்டும்


RAAJ68
பிப் 25, 2025 16:46

ஆளும் கட்சியைச் சேர்ந்த ஏகப்பட்ட முதலைகள் தமிழக தலைநகரில் உள்ளன அவர்களுக்கு போட்டியாக வந்திருக்கும்


தமிழ்வேள்
பிப் 25, 2025 12:56

சிதம்பரம் பகுதியில் பிடிபடும் முதலைகளை வக்காரமாரி ஏரியில் விடுவது வனத்துறை வழக்கம் ...ஏரியில் விட்டவுடன் , அது பல மதகுகள் கால்வாய்களில் ஏதேனும் ஒன்றின் வழியாக மீண்டும் ஏதாவது கிராமம் தோட்டம் உள்ளே புகுந்து கடித்து குதறும் ...வனத்துறையினர் பிடித்து வக்காரமாரி ஏரியில் விடுவார்கள் ......ஏரியில் விட்டவுடன் ...ரிப்பீட் ...ரிப்பீட் ...இது என்ன முதலை பிடிக்கும் விளையாட்டு ?


ஆரூர் ரங்
பிப் 25, 2025 12:35

நாறும் கூவத்துல முதலை இருக்கும் போது, கொள்ளிடம் ஆற்றில் வருவதில் ஆச்சர்யமில்லை.


Barakat Ali
பிப் 25, 2025 11:22

திமுகவை விடவா அவை ஆபத்தானவை ????


RAMAKRISHNAN NATESAN
பிப் 25, 2025 10:00

வைகுண்டேஸ்வரன் என்கிற பெயரில் எழுதும் மூர்க்க திமுக கொத்தடிமை அதென்ன இத்தனை முதலைகள் தப்பித்து விட்டன ன்னு கணக்கு ? ஏதாவது நிரூபணம் உண்டா ? என்றெல்லாம் கேள்வி கேட்டது ....


Kasimani Baskaran
பிப் 25, 2025 07:11

எங்கோ முதலைகள் தப்பி வந்ததாக சொன்னார்களே... அவை வெவ்வேறு பகுதிகளுக்கு சென்று இனப்பெருக்கம் தீவிரமாக செய்தது போல தெரிகிறது.


sundarsvpr
பிப் 25, 2025 05:45

மனிதர்கள் ஆறு அறிவுள்ள மிருகம் தான். ஆறாவது அறிவு செயல்படுத்தும்போது மனிதன். ஆண்டவன் எல்லா வஸ்துக்களுக்கும் ஆறு அறிவை கொடுத்துஇருக்கலாம். ஏன் வழங்கவில்லை? அது அவனுக்கு விளையாட்டு. நாம் விளையாடுவதில்லை. முதலையை நீரில் விட்டோம். மனிதனும் தெய்வம் ஆகலாம் என்பது சத்தியம். ராவணன் ஒரு முதலை. அதனுடன் விளையாடினான். முதலை குணம் கொண்ட நிறைய அரசியல்வாதிகள் உள்ளனர். அவர்களுடன் விளையாட ஏன் ஆண்டவன் இறங்கிவரமுடியவில்லை.?


புதிய வீடியோ