உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சி.பி.ஐ., விசாரிக்க கோரும் மனு: தள்ளுபடி செய்ய அரசு கோரிக்கை

சி.பி.ஐ., விசாரிக்க கோரும் மனு: தள்ளுபடி செய்ய அரசு கோரிக்கை

சென்னை: 'தமிழகத்தில் நிதி நிறுவன மோசடிகள் தொடர்பான வழக்கு விசாரணையை, சி.பி.ஐ.,க்கு மாற்ற கோரிய மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றத்தில், மாநில பொருளாதார குற்றப்பிரிவு கேட்டுள்ளது.'ஆருத்ரா, ஹிஜாவு, எல்.என்.எஸ்., என, பல நிதி நிறுவனங்கள், அதிக வட்டி தருவதாகக் கூறி, பல ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல், வெளிநாடுகளுக்கு சட்ட விரோதமாக பண பரிவர்த்தனை செய்துள்ளனர். இது தொடர்பான மோசடி வழக்குகளை, சி.பி.ஐ.,க்கு மாற்றி, ஐகோர்ட் ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரிக்க வேண்டும்' என, திருவண்ணாமலையை சேர்ந்த ரமேஷ் லட்சுமிபதி என்பவர் வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கு, பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார், நீதிபதி கே.குமரேஷ் பாபு அடங்கிய, 'முதல் பெஞ்ச்' முன் விசாரணைக்கு வந்தது. அப்போது பொருளாதார குற்றப்பிரிவு சார்பில், கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஆர்.முனியப்பராஜ் அறிக்கை தாக்கல் செய்தார்.அதில் கூறப்பட்டுள்ளதாவது:நிதி நிறுவன மோசடி தொடர்பாக, 2021 முதல் 2024 வரை, மொத்தம் 216 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றின் வாயிலாக, 141.29 கோடி ரூபாய் வரை மீட்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளுக்கு தப்பி சென்ற, நிதி நிறுவன உரிமையாளர்கள், இயக்குனர்களுக்கு எதிராக, 'லுக் அவுட் நோட்டீஸ்' பிறப்பிக்கப்பட்டுள்ளது. மோசடி வழக்குகளை விசாரிக்க சிறப்பு பிரிவு அமைக்கப்பட்டு, தலைமறைவானர்களை தேடி வருகிறது.கடந்த 2021 முதல் 2024 வரை, மோசடியில் ஈடுபட்ட நிறுவனங்களின் 1,524 வங்கி கணக்குகளில் இருந்த, 180.70 கோடி ரூபாய் பணம் முடக்கப்பட்டுள்ளது.மோசடி நிறுவனங்களுக்கு சொந்தமான 1118.46 கோடி ரூபாய் மதிப்பிலான 3,264 அசையும், அசையா சொத்துகள் கண்டறியப்பட்டுள்ளன.பொருளாதார குற்ற வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் உள்ள 659 வழக்குகளில், 676.6 கோடி ரூபாய் வரை பாதிக்கப்பட்டவர்களுக்கு திரும்ப வழங்கப்பட்டுள்ளது. நிதி நிறுவன மோசடி வழக்குகள் தொடர்பாக, பொருளாதார குற்றப்பிரிவு எடுக்கும் நடவடிக்கைகள் பற்றி, குறிப்பிட்ட கால இடைவெளியில் தகவல் தெரிவிக்கப்படுகிறது. எனவே, சி.பி.ஐ., விசாரணை கோரும் இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Raa
ஜூலை 19, 2024 10:38

இதிலிருந்து இருந்து என்ன தெரியவருகிறது என்றால், யார் விசாரிக்கின்றார்களோ அதைப்பொறுத்துதான் குற்றம், தண்டனை உறுதி செய்யப்படும் என்று அரசே நம்பும்போது, மக்களாகிய நாம் என்ன செய்வோம்? நாமும் நம், மாமன், மச்சான்தான் நம் குற்றங்களை விசாரிக்கணும் என்று கேட்கலாமா?


duruvasar
ஜூலை 19, 2024 09:09

மடியில் கணம் இருப்பதால் வழியில் பயமாக இருக்கிறது எசமான். நீங்கதான் எங்களை காப்பாத்தனும். அரசு தரப்பின் மொத்த வாதத்தின் பொருள் இதுதான்.


Dharmavaan
ஜூலை 19, 2024 08:39

மாநில அனுமதியை நீக்க மோடி சட்டம் கொண்டுவர வேண்டும் நாட்டிற்கு பாராளுமன்றம் உச்ச அதிகாரம் உடையது


Godyes
ஜூலை 19, 2024 08:34

நீதிபதி கேட்ட கேள்விக்கு நேரடியாக சுருக்கமான பதில் சொல்லாமல் அதாவது பின் பாயிண்ட் ரிப்ளை இந்த வக்கீல் வழக்கை குழப்பி இருக்கிறார்.


Sundar R
ஜூலை 19, 2024 08:26

டாஸ்மாக் கடையில் குவார்ட்டருக்கு 10 ரூபாய் கூடுதலாக கேட்டால் கொடுக்கிறார்கள். அதே டாஸ்மாக் கடையில் குவார்ட்டருக்கு 10 ரூபாய் குறைவாக கொடுத்தால் மது பாட்டிலைக் கொடுப்பார்களா? பண விஷயத்தில் மக்களும் நிறுவனங்களும் மிகவும் விழிப்புணர்வுடன் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். பண விஷயத்தில் அனைவரும் கறாராக இருக்க வேண்டும். சிபிஐயின் மீது மக்களுக்கு அதிகமான அளவு நம்பிக்கை இருக்கிறது.


Kalyanaraman
ஜூலை 19, 2024 07:14

நீதிமன்றங்களை சட்டத்துக்கு புறம்பாக புறக்கணிக்கும் தமிழக வழக்கறிஞர்களை கட்டுப்படுத்த திராணி இல்லாத நமது சட்டங்களாலும் நீதிமன்றங்களாலும் பொருளாதார குற்றவாளிகளை எப்படி தண்டிக்க முடியும். யார் விசாரித்தாலும் சட்டப்படி தானே விசாரணை இருக்கும். நமது முதுகெலும்பு இல்லாத சட்டங்களால் குற்றவாளிகள் அதிகரிக்கிறார்கள். நம் நாட்டில் குற்றவாளிகளை காப்பாற்றவே சட்டங்கள் உள்ளது போல் தெரிகிறது.


rama adhavan
ஜூலை 19, 2024 07:08

எவ்வளவு கோடி ரூபாய் மக்களுக்கு இழப்பு, குற்றவாளி எவ்வளவு பேர், அவர்கள் சொத்து மதிப்பு, யார் யார் அவர்கள், எவ்வளவு பேர் கைது, எவ்வளவு தலை மறைவு, விசாரணை எப்போ முடியும், குற்றவாளிகள் கைது எப்போது போன்ற விபரங்கள் எதுவும் இல்லாத மொட்டை அறிக்கை இது தான்.


GMM
ஜூலை 19, 2024 06:26

தமிழக நிதி நிறுவன மோசடியை CBI தான் விசாரிக்க வேண்டும். மோசடி துவக்கத்தில் மாநில நிர்வாகம் கண்டுபிடிக்கவில்லை என்றால், தமிழக அமைப்புகள் உடந்தை ?மோசடிக்கு பின் CBI விசாரிப்பது தான் சரி. நீதிமன்றம், மாநில நிர்வாகம் CBI விசாரிக்கும் முன் தலையிட முடியாது. விசாரித்த பின் விதி மீறல் இருந்தால் மட்டும் தான் நீதிமன்றம் விசாரிக்க வேண்டும். CBI பணி தான் என்ன? எதற்காக மாநில நிர்வாக அனுமதி பெற வேண்டும்?. அரசியல் காரணமாக எந்த மாநிலமும் அனுமதிக்காது. மாநில அனுமதி முறை ஒரு செயற்கை அதிகாரம்.. CBI எடுபிடி வேலை செய்ய அமைக்கப்பட்ட அமைப்பு கிடையாது. உள்நாட்டு குற்றம் ஒடுக்க உருவாக்க பட்ட தேசிய அமைப்பு .


Kasimani Baskaran
ஜூலை 19, 2024 05:17

ஆருத்ரா நிதி நிறுவனம் தீம்காவின் பினாமிகளால் நடத்தப்படுவது என்றும் அதிலுள்ளவர்களை பாதுகாக்கவே இது போல சிபிஐ வேண்டாம் என்றும் சொல்வது போல தெரிகிறது. நிச்சயம் சிபிஐ உள்ளே வரவேண்டும் - இல்லை என்றால் வேங்கை வயல் விவகாரம் போல பல ஆண்டுகளானாலும் ஒன்றும் நடக்காது.


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை