உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஐந்து மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல்

ஐந்து மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல்

சென்னை: நகராட்சிகளை மாநகராட்சிகளாக தரம் உயர்த்த விதிமுறைகளில் திருத்தம் செய்யும் சட்ட மசோதா உட்பட சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட 5 மசோதாக்களுக்கு கவர்னர் ரவி ஒப்புதல் அளித்து உள்ளார்.உள்ளாட்சி அமைப்புகளை தரம் உயர்த்தும் விதிமுறைகளில் திருத்தம் செய்து தேவையான நகரங்களை பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி என தரம் உயர்த்த, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் திருத்த சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது.நகராட்சிகள் விரிவாக்கம் செய்யப்படும்போது அவற்றுடன் இணைக்கப்படும் ஊராட்சிகளின் சொத்துகள், வரி விதிமுறைகள் தொடர்பாக, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் இரண்டாம் திருத்த சட்ட மசோதா நிறைவேற்றப் பட்டது.சென்னை மாநகர காவல் திருத்த சட்டம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணைய தலைவர் ஓய்வு உச்சவரம்பை 75 ஆக உயர்த்தும் திருத்த சட்டம், கழிவு நீர் இணைப்பு பெறுவதை கட்டாயமாக்கும் திருத்த சட்ட மசோதாவுக்குகவர்னர் ஒப்புதல் அளித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை