உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / முதுநிலை மருத்துவ இட ஒதுக்கீடு அரசாணையை திரும்ப பெற்றது அரசு

முதுநிலை மருத்துவ இட ஒதுக்கீடு அரசாணையை திரும்ப பெற்றது அரசு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: முதுநிலை மருத்துவப் படிப்பில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேருவோருக்கு, 10 துறைகள் மட்டுமே வழங்கப்படும் என்ற அரசாணையை, தமிழக மக்கள் நல்வாழ்வு துறை நிறுத்தி வைத்துள்ளது.முதுநிலை மருத்துவப் படிப்புகளில், மாநில அரசு ஒதுக்கீட்டில் மொத்தமுள்ள இடங்களில் 50 சதவீதம், அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் எம்.பி.பி.எஸ்., டாக்டர்களுக்கு வழங்கப்படுகின்றன.இந்த ஒதுக்கீட்டின் கீழ், எம்.டி., - எம்.எஸ்., படிப்புகளில் அரசு டாக்டர்கள் விரும்பும் துறைகளை தேர்வு செய்து படித்து, மீண்டும் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றி வருகின்றனர். இதற்கிடையே, முதுநிலை மருத்துவப் படிப்பு களில், 50 சதவீத அரசு ஒதுக்கீட்டில் சேருவோருக்கு, இனி பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, குழந்தை நலம்.மகப்பேறு, சமூக மருத்துவம், மயக்கவியல் உள்ளிட்ட, 10 முதுநிலை படிப்புகள் மட்டுமே ஒதுக்கப்படும் என்றும், அதில் ஒன்றை தேர்வு செய்து படிக்கலாம் என்றும், மக்கள் நல்வாழ்வு துறை அரசாணை வெளியிட்டுள்ளது.இதனால், காது - மூக்கு - தொண்டை, தோல், கண், மனநலம், சர்க்கரை அவசர மருத்துவம் உள்ளிட்ட 20 துறைகளில் சேர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு, டாக்டர்கள் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.இந்நிலையில், அரசு ஒதுக்கீட்டில், 10 துறைகளில் மட்டுமே சேர முடியும் என்ற அரசாணை 151ஐ, மறு உத்தரவு வரும் வரை நிறுத்தி வைத்து, மக்கள் நல்வாழ்வு துறை செயலர் சுப்ரியா சாஹு உத்தரவு பிறப்பித்துள்ளார்.இந்த அரசாணை நிறுத்தி வைக்கப்பட்டதற்கு, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் உள்ளிட்டோருக்கு, அரசு டாக்டர்கள் மற்றும் பட்ட மேற்படிப்பு டாக்டர்கள் சங்கத்தின் செயலர் ராமலிங்கம் நன்றி தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

madhavan rajan
ஆக 01, 2024 11:01

பல்டி அடிப்பதெல்லாம் ஒரு விடியலா? முதல்ல போட்ட அரசாணை விடியலுக்கு எதிரானது ஏற்றுக்கொள்வார்களா?


ஆரூர் ரங்
ஆக 01, 2024 09:35

குறிபிட்ட சில துறைகளில் படிக்க ஆளே வருவதில்லை. இதனால் மருத்துவக் கல்லூரிகளில் அத்துறைகளில் பாடம் நடத்த ஆசிரியர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அரசில் ஆள் பற்றாக்குறையுள்ள சிறப்புப் படிப்புகளில் மட்டுமே சர்வீஸ் விண்ணப்பதாரர்களுக்கு இடமளிக்க வேண்டும்.


GMM
ஆக 01, 2024 08:20

இந்திய மருத்துவ கவுன்சிலை பொருட்படுத்தாமல், மாநில நிர்வாகம் இஷ்டம் போல அரசாணை வெளியீடு முறையை மத்திய அரசு மற்றும் நீதிமன்றம் தடுக்க வேண்டும். இது போன்ற முறையற்ற அதிகாரம் இருக்கும் வரை ஊழல் குறையாது. கல்வி தரம் குறையும். சர்வதேச அளவில் மதிப்பு குறையும். அதிகார போட்டி அதிகரிக்கும். நீதிமன்ற செயல்பாடுகளும் சுய கட்டுப்பாட்டில் இல்லை. அரசையும் முறைப்படுத்த அனுமதிப்பது இல்லை.


Duruvesan
ஆக 01, 2024 06:38

ஆக எல்லோருக்கும் விடியல் தரும் விடியல் சார் வாழ்க


Kasimani Baskaran
ஆக 01, 2024 05:27

டகால்டி வேலை செய்யப்பார்த்தால் விட்டு விடுவார்களா.


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை