மேலும் செய்திகள்
சசிகலா வீட்டை உளவு பார்க்கும் நபர் யார்?
1 hour(s) ago
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அட்மிட்
2 hour(s) ago
எதிர்த்து யாரும் போராடாத போது யாருடன் தமிழகம் போராடும்?
2 hour(s) ago
சென்னை: தமிழக ரேஷன் கடைகளில் கார்டுதாரர்களுக்கு அரிசி, கோதுமை, சர்க்கரை, துவரம் பருப்பு, பாமாயில் வழங்கப்படுகிறது. இவற்றை நுகர்பொருள் வாணிப கழகம் கொள்முதல் செய்கிறது. பெரும்பாலான ரேஷன் கடைகளை, கூட்டுறவு சங்கங்கள் நடத்துகின்றன.எனவே, ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள முதன்மை சங்கங்களின் கிடங்குகளுக்கு, ரேஷன் பொருட்கள் அனுப்பப்படுகின்றன. அங்கிருந்து வாகனங்களில் ஏற்றப்பட்டு, கடைகளுக்கு எடுத்து செல்லப்படுகின்றன. இது தவிர, வாணிப கழக கிடங்குகளில் இருந்து ரேஷன் கடைகளுக்கு நேரடியாகவும் அனுப்பப்படுகின்றன.ரேஷன் பொருட்களை கடையில் இறக்கும் போது, ஒரு மூட்டைக்கு 2 - 3 கிலோ வரை குறைவாக இருப்பதாக, ரேஷன் ஊழியர்கள் புகார் தெரிவிக்கின்றனர். எனவே, ரேஷன் பொருட்கள் பாதுகாப்பாக சென்றடைவதை உறுதி செய்யும் பொருட்டு, அவற்றை ஏற்றிச் செல்லும் வாகனங்களில், ஜி.பி.எஸ்., என்ற வாகன நகர்வு கண்காணிப்பு கருவிகள் பொருத்த நடவடிக்கை எடுக்குமாறு, முதன்மை சங்கங்களுக்கு, கூட்டுறவு துறை உத்தரவிட்டுள்ளது.இதுகுறித்து, கூட்டுறவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:ஜி.பி.எஸ்., கருவி பொருத்துவதால், வாகனங்கள் அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தில் செல்வதை கண்காணிக்க முடியும். வாகனங்கள் செல்லும் நேரமும் அறிய முடியும். அனுமதித்த நேரத்தை விட தாமதமானால், அதற்கான காரணம் கேட்டு நடவடிக்கை எடுக்க முடியும். எனவே, வாகனங்கள் கணக்கெடுக்கப்பட்டு, ஜூன் இறுதிக்குள் கருவிகள் பொருத்தப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
1 hour(s) ago
2 hour(s) ago
2 hour(s) ago