உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நிலத்தடி நீர் மட்டம் 9 மாவட்டத்தில் சரிவு

நிலத்தடி நீர் மட்டம் 9 மாவட்டத்தில் சரிவு

சென்னை:தொடர் பயன்பாடு காரணமாக, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட ஒன்பது மாவட்டங்களில், நிலத்தடி நீர் மட்டம் குறைந்துள்ளது.நீர்வளத்துறையின் கீழ், மாநில நில மற்றும் மேற்பரப்பு நீர்வள ஆய்வு மையம் இயங்கி வருகிறது. இதன் வாயிலாக, சென்னையை தவிர்த்து, 37 மாவட்டங்களில் ஆய்வு கிணறுகள் அமைக்கப்பட்டு, நிலத்தடி நீர்மட்டம் கண்காணிக்கப்படுகிறது. ஒவ்வொரு மாத இறுதியிலும், நிலத்தடி நீர்மட்ட விபரங்கள் சேகரிக்கப்பட்டு, அரசிற்கு அனுப்பப்படுகின்றன. அத்துடன், தனியார் நீரியல் ஆய்வு நிறுவனங்களிடம் இருந்தும் தரவுகள் பெறப்படுகின்றன. அதன்படி, ஜூன் மாத இறுதியில் நடந்த ஆய்வில், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தஞ்சாவூர், ராமநாதபுரம், துாத்துக்குடி, கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, மயிலாடுதுறை மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ளது தெரியவந்துள்ளது. ஆனாலும், ௧ மீட்டருக்கும் குறைவாகவே நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ளது. பாசனம் மற்றும் குடிநீர் உள்ளிட்ட தேவைகளுக்கான தொடர் நுகர்வு காரணமாகவே, நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ளதும் தெரியவந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ