உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 21 மாவட்டங்களில் 4 நாட்களுக்கு கனமழை

21 மாவட்டங்களில் 4 நாட்களுக்கு கனமழை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி உள்பட, 21 மாவட்டங்களில், இன்னும் நான்கு நாட்கள் கனமழை நீடிக்கும்' என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பு:தென்மாவட்ட கடலோர பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கில் சுழற்சி நிலவுகிறது. இதனால், சில மாவட்டங்களில் மிக கனமழையும், பல மாவட்டங்களில் கனமழையும் பெய்யும். இன்று: தென்காசி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் மிக கனமழை. கன்னியாகுமரி, திருநெல்வேலி, துாத்துக்குடி, விருதுநகர், மதுரை, திருப்பூர், கோவை, நீலகிரி, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் திருப்பத்துார் மாவட்டங்களில் கனமழை.நாளை: கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் மிக கனமழை. நீலகிரி, கோவை, திருப்பூர், துாத்துக்குடி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் கனமழைஇதேபோல், வரும், 20, 21ம் தேதிகளில், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மாவட்டங்களில், மிக கனமழையும், மற்ற மாவட்டங்களில் கனமழையும் பெய்யும்.சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் மிதமான மழை பெய்யும். அதிகபட்சம், 33 டிகிரி செல்ஷியஸ் வரை வெப்பம் பதிவாகும்.குமரிக்கடல், மன்னார் வளைகுடா, தென் மாவட்ட கடலோரப் பகுதி, கேரள கடலோர பகுதிகள் மற்றும் இலங்கை கடலோரப் பகுதிகளில், மணிக்கு, 55 கி.மீ., வேகத்தில் சூறாவளி காற்று வீசும். எனவே, நாளை முதல் 21ம் தேதி வரை மீனவர்கள், இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.-


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Ram pollachi
மே 18, 2024 08:26

மழை வந்தால் எந்த வேலையும் நடக்காது.. எங்காவது சரக்கு அடிச்சுகிட்டு தூங்க வேண்டியது தான்...


angbu ganesh
மே 18, 2024 09:45

தண்ணி இல்லேன்னா எந்த thanniyum illa சார் தண்ணி தான் உலகின் வரப்பிரசாதம் இது புரியாம பேசறீங்களே உங்களுக்கு எல்லாம் சரக்கு இருந்தா போதும் என்ன ஒரு மனுஷனுங்கப்பா


அப்புசாமி
மே 18, 2024 06:26

ஆஹா... மழை.பெய்யும் போது தூங்கிட்டு , இருக்கிற மணலை வாரி வூடு கடி, ஏரி, கிணறு எல்லாத்தையும் மூடி, ஊர்முழுக்க வெள்ளம் வந்து சந்தி சிரிப்போம். வெள்ளநிவாரணம் இப்போ கேப்போம். வறட்சி நிவாரணம் பின்னாடி கேப்போம்.


மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ