உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கான பணத்தை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தலாமே: உயர் நீதிமன்றம்

ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கான பணத்தை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தலாமே: உயர் நீதிமன்றம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை:'கிராம கோவில் திருவிழாக்களின்போது ஆடல், பாடல் நிகழ்ச்சி நடத்த செலவிடும் பணத்தை, நீர்நிலைகளை துார்வாருதல் உள்ளிட்ட ஆக்கப்பூர்வமான நோக்கங்களுக்கு பயன்படுத்தலாம்' என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அறிவுறுத்தியுள்ளது.மதுரை உட்பட தென் மாவட்டங்களில், பல்வேறு கிராம கோவில்களில் திருவிழாக்களையொட்டி ஆடல், பாடல் நிகழ்ச்சிகளுக்கு அனுமதிக்க, போலீசாருக்கு உத்தரவிடக்கோரி வழக்குகள் தாக்கலாகின.நீதிபதி பி.புகழேந்தி: தற்போது ஆடல், பாடல் நிகழ்ச்சி எல்லா கோவில் திருவிழாக்களிலும் பொதுவானதாகிவிட்டது. இது ஒரு கலாசார வளர்ச்சியாகத் தோன்றுகிறது. திரைப்பட பாடல்களை இசைத்து, அதற்கேற்ப ஆண்கள், பெண்கள் வண்ணமயமான உடையில் மேடையில் நடனமாடுகின்றனர். இசைக்கப்படும் பாடல்களில் பெரும்பாலானவை ஆபாசமான, இரட்டை அர்த்தத்தில், பாலுணர்வை துாண்டும் வகையில் உள்ளதாக அரசு தரப்பு கூறியது. இந்த ஆட்சேபனைகளை முற்றிலும் மறுக்க முடியாது.தமிழகம் பல கலைகள், கலாசாரங்களை கொண்ட செழுமையான பாரம்பரியம் கொண்ட மாநிலம். ஒவ்வொரு பகுதியும் தனித்துவமான கலை, கலாசாரத்தை கொண்டுள்ளது. இருப்பினும், இளைஞர்கள் அக்கலைகளில் ஆர்வம் செலுத்தாமல், சினிமா பாடல்களை விரும்புகின்றனர்.ஆபாசமாக நடனமாடுவது தடை செய்யப்பட்ட ஒன்று. இது முன் 'ரிக்கார்டு டான்ஸ்' என அழைக்கப்பட்டது. பின் அது 'காபரே' நடனமாக வளர்ந்தது. தற்போது அத்தகைய நடனம் கிராம திருவிழாக்களில் ஆடல், பாடல் என்ற பெயரில் நிகழ்த்தப்படுகிறது.கஜா புயலால் தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் பாதிப்பு ஏற்பட்டது. ஆடல், படல் நிகழ்ச்சி நடத்துவதற்காக வசூலித்த பொதுப் பணத்தை, சில இளைஞர்கள் ஒரு குழுவாக சேர்ந்து தங்கள் கிராம நீர்நிலைகளை துார்வார பயன்படுத்தினர்; அப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்தது. இதை அறிந்த பல தன்னார்வலர்கள், பிற கிராம மக்கள் மற்றும் பல அமைப்புகள் தானாக முன்வந்து, தங்களின் பங்களிப்பை அளித்து வருகின்றனர். இதுவரை அவர்கள் பல மாவட்டங்களில் 200 நீர்நிலைகளை துார்வாரி உள்ளனர்.ஆடல், பாடல் நிகழ்ச்சியில் பங்கேற்கும் கலைஞர்கள் அரைகுறை ஆடைகள் அல்லது ஆபாச நடன அசைவுகளை பயன்படுத்தமாட்டர். இரட்டை அர்த்த பாடல்கள் அல்லது வசனங்கள் அல்லது ஜாதி, மதம் அல்லது அரசியல் வசனங்கள் இடம்பெறாது என்பன உள்ளிட்ட உத்தரவாதத்தை மனுதாரர்கள் போலீசாரிடம் சமர்ப்பிக்க வேண்டும். அதன்படி, நிபந்தனைகளுக்கு உட்பட்டு, நிகழ்ச்சி நடத்த போலீசார் அனுமதிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 22 )

Kathir Nilavan
ஜூன் 14, 2024 11:48

அய்யா அவர்களுக்கு மதுரை உயர் நீதி மன்றம் நீர் நிலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


K.Muthuraj
ஜூன் 13, 2024 14:08

யார் என்னதான் கடவுள் பற்றிய அற்புதங்கள், சித்தாந்தங்கள், விளக்கங்கள் கூறினாலும், எல்லாருக்கும் இறைவனை பற்றி இதுவரை தாங்கள் தெரிந்து கொண்டதெல்லாம் பொய் என்று நமக்கு நன்றாக தெரியும். உலகத்தில் நடக்கும் கொடூர விஷயங்கள் ஒவ்வொன்றும், இறைவனை பற்றிய நமது எண்ணங்களுக்கு எதிர்மறை விஷயங்களாய் உள்ளது. ஆனாலும் மக்களை நல்வழிப்படுத்த இறைவன் என்றொரு மாய வார்த்தை -பூச்சாண்டி காட்டுவதுபோல்- நமக்கு தேவைப்படுகின்றது. படைப்பு விசித்திரமானது. ஒன்றின் அழிவில் தான் மற்றொன்றின் இருப்பு உறுதியாகின்றது. இவ்வுலகில் நடக்கும் விஷயங்களுக்கு நியாய தீர்ப்பு என்பது உண்மையிலேயே உண்டா என்பதுவும் தெரியவில்லை. கடவுளை பற்றிய நமது எண்ணங்களுக்கு ஒரே ஒரு நிரூபணம் படைக்கப்பட்டுள்ள இந்த உலகம் மட்டுமே. இனி விசயத்திற்கு வருவோம். முடிவற்ற இந்த உலகம் அல்லது இந்த படைப்பு கொண்டாடப்படவேண்டியது. நாம் இறைவனை கொண்டாட வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் படைப்பினை படைப்பின் பரிணாமங்களை கொண்டாடலாம். இன்னும் சொல்லிக்கொன்டே செல்லலாம் - கொண்டாடட்டும் என்று விட்டுவிட்டனர். இறைவன் முன் எதுவும் துக்கமானது அல்ல. பிற மதகோட்டபாடுகள் போல் எந்த வித சட்டங்களும் திட்டங்களும் உருவாக்கி கொடுப்பதில்லை.


S.Bala
ஜூன் 13, 2024 12:41

அரசு செலவில் செய்யாமல் அந்த கட்சிக்காரர்களே செய்யலாமே. இதற்கு ஏதாவது தீர்வு உண்டா யுவர் ஹானர் ?


Maheesh
ஜூன் 13, 2024 12:29

100 நாள் வேலை திட்டத்தை நீர்நிலைகள் தூர்வார பயன்படுத்தலாமே? அதற்கு காண்ட்ராக்ட் விட்டு, அந்த காண்ட்ராக்ட்டர் மண்ணை விற்பதில் பெறும் வருமானம் காண்ட்ராக்ட் அமொண்ட்டை விட அதிகமாக வருகிறது.


நாஞ்சில் நாடோடி
ஜூன் 13, 2024 10:42

நீர்நிலைகளை பாதுகாக்க அரசு ஒதுக்கும் பணத்தை கொள்ளை அடிக்கும் அரசியல்வாதிகளை கண்டிக்க தைரியம் இல்லாத கோர்ட் விழாக்களை தடைசெய்ய புத்திமதி கூறுகிறது ...


சிந்தனை
ஜூன் 13, 2024 10:07

தினசரி எத்தனை கோடிகள் மது அருந்துவதில் செலவாகிறது. தானும் மது அருந்துபவர்கள் அதை பார்ப்பதில்லை. தாத்தாக்களுக்கு ஆடல்பாடல் விஷயத்தில் மட்டும் பொறாமை ஏனோ?


பாரதி
ஜூன் 13, 2024 09:52

ஆண்களுக்கு உணர்ச்சி அளிக்கும் நிகழ்ச்சிகளால் என்ன தவறு. இவைகள் இல்லாவிட்டால் வாழ்க்கை பொருள் இழக்கும். பெண்கள் தற்கொலை செய்துகொள்வர், வெளிநாட்டு ஆடவரை நாடுவர்.. இதெல்லாம் தேவையா? மனிதன் என்பவன் பணம் சம்பாதித்து சாப்பிட்டு ...வெறும் யந்திரமல்ல. பாரீஸ்டர் சட்டம் பயின்ற காந்தீஜீ போன்றோர் சம்பளம் இன்றி நாட்டுக்காக பணி செய்துள்ளார்கள். அதேபோல நன்றிக் கடன் அடைக்கும் நேர்மை உள்ளம் கொண்ட நீதிபதிகள் தங்கள் சம்பளத்தை நாட்டு நலப் பணிகளுக்காக தியாகம் செய்து காந்தீஜீ போன்று பணி செய்ய முன் வருவது நல்ல உதாரணமாக அமையும்.


raju
ஜூன் 13, 2024 09:00

ஆபாச நடனங்கள் வசனங்களை தடை செய்வதில் யாருக்கும் மாற்று கருத்து இல்லை. அதற்க்காக நிகழ்ச்சிகளுக்கு பயன்படும் பணத்தை வேறு தேவைகளுக்கு மாற்றம் செய்ய சொல்வது எப்படி நியாயம் ஆகும். அப்படி பார்த்தால் நீதிமன்றங்களில் தேவையற்ற நிகழ்ச்சிகள் சிலவுகள் நடக்கின்றன. நிறைய அரசு நிகழ்ச்சிகள் மற்றும் ஒரு தலைவர் தியானம் செய்ய பல கோடி சிலவு செய்கிறார்கள். 1000 கணக்கா மனித ஆற்றல் வேஸ்ட் ஆகிறது. இதில் மத்திய மாநில ஆட்சிகள் இரண்டுக்கும் வேறுபாடு கிடையாது. திருவிழா என்பது கலை நிகழ்ச்சிகள் நிகழ்ச்சிகளை உள்ளடடிக்கியதே. இதில் கலைஞர்களும் பயன் அடைகிறார்கள்.


SIVA
ஜூன் 13, 2024 08:54

பள்ளிக்கல்வி துறை தவிர வேறு யாருக்கும் கோடை கால விடுமுறை எந்த தனியார் மற்றும் அரசு துறைகளுக்கு இல்லை, மருத்துவமனை, போலீஸ், போக்குவரத்து இவற்றுக்கு ஒரு நாள் கூட பொது விடுமுறை இல்லை, இங்கு ஒரு தனி நபர் சமாதிக்கு இடம் கொடுப்பதற்காக இரவு இரண்டு மணிக்கு வழக்கு நடத்தப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டது, இதே விரைவான விசாரணையை ஊழல் அரசியல் வாதிகள் வழக்குகள் மீது செயல்படுத்தலாமே, கோர்ட்டுக்கு மட்டும் ஏன் கோடை விடுமுறை .....


raja
ஜூன் 13, 2024 08:05

தெருவுக்கு தெரு அரசு செலவில் கட்டுமரத்துக்கு சிலை வைப்பது பேனா வுக்கு சிலை வைப்பது எல்லாம் ஆக்க பூர்வமானதா யுவர் ஆனர்...


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை