உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / காங்., ஆட்சியில் கட்டாயப்படுத்தப்பட்ட மொழியானது ஹிந்தி: இப்போது அதை படித்தால்தான் தொழில் செய்ய முடிகிறது!

காங்., ஆட்சியில் கட்டாயப்படுத்தப்பட்ட மொழியானது ஹிந்தி: இப்போது அதை படித்தால்தான் தொழில் செய்ய முடிகிறது!

கரூர்: 'வெளிமாநிலங்களில் வணிகம் மேற்கொள்ளவும், அதன் வளர்ச்சிக்கும் மூன்றாவது மொழி அவசியம்' என, கரூர் தொழில்முனைவோர் கருத்து தெரிவித்து உள்ளனர்.கரூரில், வீட்டு உபயோக ஜவுளி உற்பத்தி நிறுவனங்கள், கொசு வலை, பஸ் பாடி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் ஏற்றுமதி, வெளி மாநிலங்களில் வணிகம் மேற்கொள்ளவும், அதன் வளர்ச்சிக்கும், ஹிந்தியும், ஐரோப்பிய நாடுகளில் உள்ள மொழிகளையும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது.இதுகுறித்து, கரூர் தொழில் முனைவோர் கூறியதாவது:கே.நந்தகோபால், வேளாண் பொருட்கள் உற்பத்தியாளர், க.பரமத்தி: காங்., ஆட்சி இருந்தவரை, தேசிய கல்விக் கொள்கையில், மூன்றாவது மொழியாக ஹிந்தி கட்டாயம் என்று இருந்து வந்தது. ஆனால், பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்ததும், தேசிய கல்விக் கொள்கையில் பெரிய மாற்றமாக, ஐந்தாம் வகுப்பு வரை தாய்மொழி பயின்றும், ஆங்கிலம் கட்டாயம் மொழியாகவும் ஆனது.மூன்றாவது மொழியாக ஹிந்தி கட்டாயம் கிடையாது. விருப்பத்திற்கு ஏற்ப மொழியை தேர்வு செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.இதனால், ஏழை, எளிய நடுத்தர மக்கள் பயன்பெறும் வகையில், இந்திய மொழிகளில் ஏதாவது ஒரு மொழியை மாணவர்கள், அவர்கள் விருப்பத்திற்கு ஏற்ப தேர்வு செய்யவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.வெளி மாநிலங்களுக்கு கல்வி கற்க, மத்திய அரசு பணி, தொழில் தொடங்க மூன்றாவது மொழி இருந்தால் சிரமம் இருக்காது. வெளிநாடுகளில் கல்வி, தொழில் செய்ய மூன்றாவது மொழி அவசியம்.சிந்தியா நடேசன், பெட்ரோல் பங்க் உரிமையாளர், பஞ்சமாதேவி, கரூர்: தற்போது போட்டிகள் நிறைந்த வணிக உலகில், பல மொழிகள் கற்றுக்கொள்வது மிக அவசியமாகிறது. பெட்ரோல் பங்க் தொழில்களை மேற்கொள்ளும்போது, ஹிந்தி அவசியம் தேவைப்படுகிறது.உயர் அதிகாரிகளுக்கு வேண்டுமானால் ஆங்கிலம் தெரிந்திருக்கலாம். அவர்களுக்கு கீழே உள்ள அதிகாரிகளுக்கு, ஆங்கிலம் தெரிந்திருக்க வாய்ப்பு குறைவு.அப்போது, ஹிந்தியில் சரளமாக உரையாடினால், நமக்கு வேண்டிய தகவலை பெற முடியும். நான் மருத்துவ துறையில் பணியாற்றி இருப்பதால், அங்கு பல மொழிகள் அறிவு அவசியமாகும்.மருத்துவ தலைநகரமாக விளங்கும் தமிழகத்தில், வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் அதிகம் பேர் சிகிச்சைக்கு வருகின்றனர். அவர்களுக்கு உள்ள பிரச்னையை புரிய வைக்க, ஹிந்தி மொழி தெரிந்து இருப்பது அவசியமாகும்.எஸ்.ஆனந்த், ஜவுளி உற்பத்தி மற்றும் ஏற்றுமதி நிறுவன உரிமையாளர், கரூர்: கரூர் மாவட்டத்தில் இருந்து, வீட்டு உபயோக துணி உற்பத்தி பொருட்களை ஏற்றுமதி செய்ய, ஏற்றுமதி நிறுவனங்களில் ஆங்கிலம் மட்டும் தெரிந்தால் போதாது.ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய பிரான்ஸ், ஜெர்மன் உட்பட பல மொழிகள் தெரிந்து இருந்தால், எளிதில் ஆர்டர்களை பெற முடியும். வட மாநிலங்களில் பொருட்கள் விற்பனை செய்யவும், மூலப்பொருட்களை கொள்முதல் செய்யவும், ஹிந்தி மொழி அவசியம் தெரிந்திருக்க வேண்டும்.இங்குள்ளவர்கள் ஹிந்தி மொழியை பேச கற்றுக் கொண்டு விடுகின்றனர். ஆனால், எழுத, படிக்க தெரியாமல் உள்ளனர். இதற்கு முக்கிய காரணம், பள்ளிகளில் நமக்கு மூன்றாவது மொழி கற்கும் வாய்ப்பு இல்லை.தற்போது, தனியார் பள்ளிகளில் மூன்றாவது மொழி படிக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. அரசு பள்ளிகளில் படிக்கும் ஏழை, ஏளிய மாணவர்களுக்கு இந்த வாய்ப்பு இல்லை. மூன்றாவது மொழி கற்கவில்லை என்றால், கரூர் போன்ற நகரங்களில் தொழில் முனைவோராக மாறுவது கடினமாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 28 )

Nirmal Senthivel
பிப் 24, 2025 07:07

மூன்றாவது வழியாக இந்தியை கற்றுக் கொடுப்பதற்கு பதில். உலக அளவில் மூத்த மொழியான தமிழ் மொழியை ஏன் பிற மாநிலங்களில் இந்தியாவில் மற்ற மாநிலங்களில் கற்றுக் கொடுப்பதில்லை. உலக நாடுகள் பலவும் தங்கள் மாணவர்களுக்கு தமிழை கற்றுக் கொடுக்கும் போது இந்தியாவும் அதை பின்பற்றி அனைத்து மாநிலங்களிலும் தமிழை கட்டாயமாக்க வேண்டும் இதுவே சரியானதாக இருக்கும். சமஸ்கிருதம் மொழி வளர்ச்சிக்கு பல நூறு கோடிகளை ஒதுக்கி உள்ள ஒன்றியஅரசு ஏன் தமிழை வளர்க்க ஒரு சில கோடிகளை கூட ஒதுக்காமல் விட்டுள்ளது


Subash BV
பிப் 23, 2025 14:23

TAMIL PEOPLE WAKE UP. STALIN NOT IMPLEMENTING TAMIL MEDIUM PROPERLY OTHERWISE NOT INTERESTED TO DEVELOP TAMIL LANGUAGE. FOR SUITCASES POLITICS HES CONTINUING ENGLISH MEDIUM. NOT EVEN 1% OF OUR CHILDREN GO TO FOREIGN ENGLISH COUNTRIES THAT TO ITS RESERVED FOR ONLY HAVES. HINDHI IS AN INDIAN LANGUAGE. MAKE TAMIL AS A COMPULSORY FIRST LANGUAGE. DONT FALL IN POLITICIANS TRAPS, BE ALERT. ITS YOUR CAREER.


நிக்கோல்தாம்சன்
பிப் 23, 2025 10:20

எல்லா விஷயங்களிலும் நாம் பலவகையிலும் நெருங்கி விட்டோம், ஆனால் இந்த தறுதலை அரசியலால் முன்னேற முடியாமல் தவிக்கிறோம் என்பதனை தமிழர்கள் உணரும்போது சர்வாதிகார அடக்குமுறை ஒழிக்கப்படும்


Palanisamy T
பிப் 23, 2025 10:10

Ram -மூன்றாவது மொழியென்றால் ஹிந்தி என்று அர்த்தமில்லை என்று சொல்கிண்றீர்களே. நீங்கள் இல்லை என்பது உண்மையில்லை. "சோழியன் குடுமி சும்மா ஆடாது".


Padmasridharan
பிப் 23, 2025 08:43

ஒரு மொழியை கத்துக்க "எழுத, படிக்க, பேச" என்று 3 வகை இருக்கிறது. ஹிந்தி பேச தெரிந்தவர்களுக்கு எழுத_பேச தெரியாதவர்கள் வட மாநிலத்தவர்கள் எத்தனையோ பேர். தமிழ்நாட்டுல "ழ" உச்சரிக்க தெரியாதவங்க நிறைய பேர் இருக்கிறார்கள். மொதல்ல இந்த நிலைமை மாறட்டும். Professional காக ஒரு மொழி கத்துக்கிறதும் studies ல ஒரு மொழியை சேர்க்கறதும் வேற


Kalyanaraman
பிப் 23, 2025 08:00

புதிய கல்விக் கொள்கையில் அனைவரும் ஐந்தாம் வகுப்பு வரை கட்டாயம் தமிழில் பாடங்களை படித்தாக வேண்டும். எல்லோரும் தமிழகத்தில் தமிழில் படிப்பதை தவிர்க்கவே, தமிழுக்கு தூண் என்று சொல்லிக் கொள்ளும் திமுக இதை எதிர்க்கிறது.


துரைமுருகன், வேலூர்
பிப் 23, 2025 07:40

இந்தி பேசும் அனைத்து மாநிலங்களும் மும்மொழிக் கொள்கையை ஏற்று செயல்படுத்தி உள்ளன பீகார்: மூன்றாவது மொழி பெங்காலி, உருது, ஒடியா, சமஸ்கிருதம். உத்தரப்பிரதேசம்: மூன்றாவது மொழி பெங்காலி, பஞ்சாபி, பஹாடி, சமஸ்கிருதம் ஹரியானா: மூன்றாவது மொழி பஞ்சாபி, சமஸ்கிருதம், பஹாடி ஹிமாச்சல்: மூன்றாவது மொழி பஞ்சாபி சமஸ்கிருதம் மத்தியப்பிரதேசம்: மூன்றாவது மொழி சமஸ்கிருதம், குஜராத்தி, மராத்தி சத்தீஸ்கர்: மூன்றாவது மொழி சமஸ்கிருதம், ஒடியா, தெலுங்கு ஜார்கண்ட்: மூன்றாவது மொழி பெங்காலி, ஒடியா, சமஸ்கிருதம் இந்தி தாய்மொழியாக இல்லாத மாநிலங்களும் மும்மொழி முறையை அமல்படுத்தியுள்ளன. மகாராஷ்டிரா: மூன்றாவது மொழி இந்தி, சமஸ்கிருதம், குஜராத்தி, தெலுங்கு, கன்னடம், கொங்கனி கோவா: மூன்றாவது மொழி மராத்தி, கன்னடம், ஹிந்தி, சமஸ்கிருதம் கர்நாடகா: மூன்றாவது மொழி தெலுங்கு, கொங்கனி, தமிழ், மலையாளம், சமஸ்கிருதம், ஹிந்தி. கேரளா: மூன்றாவது மொழி தமிழ், கன்னடம், கொங்கணி, இந்தி, சமஸ்கிருதம் தெலுங்கானா: மூன்றாவது மொழி மராத்தி, இந்தி, கன்னடம், சமஸ்கிருதம் ஆந்திரா: மூன்றாவது மொழி ஒடியா, இந்தி, தமிழ், கன்னடம், சமஸ்கிருதம் அனைத்து மாநிலங்களும் கற்பிக்க வேண்டிய பட்டியலில் (1) தாய்மொழி (2) ஆங்கிலம் (3) அண்டை மாநில மொழி அல்லது ஹிந்தி, சமஸ்கிருதம் விருப்ப மொழியாக இருக்கலாம். மூன்றாவது மொழி இந்தியாகத்தான் இருக்க வேண்டும் எனும் அவசியமில்லை. இந்தி அல்லது வேறு எந்த மொழியையும் அறியாததற்காக எந்த மாநிலமும், இனமும் அல்லது நபரும் ஒதுக்கி வைக்கப்படக்கூடாது. மக்கள் தங்கள் விருப்பப்படி அதிக மொழிகளைக் கற்றுக்கொள்ளலாம். இதுவே மும்மொழி கல்விக்கொள்கை.


T.sthivinayagam
பிப் 23, 2025 07:28

ஒரு பக்கம் ஹிந்தி கட்டாயம் இல்லை என்று சொல்லி கொண்டு இன்னொரு புறம் ஹிந்தி படித்தால் வேலை வாய்ப்பு கிடைக்கும் ஹிந்தி படித்தால் நல்லது என்று பாஜக தலைவர்கள் ஏன் சொல்கிறார்கள். ஆலயங்களில் இறைவழிபாட்டின் போது சமஸ்கிருதம் புரியாமல் ஆன்மீக பக்தர்கள் சிரம்படுகிறார்கள் இதற்கு என்ன வழி பாஜாக தலைவர்கள் என்ன செய்வார்கள் என்று மக்கள் கேட்கிறார்கள்


R Devarajan
பிப் 23, 2025 07:19

கூட்டணி கட்சி காங்கிரெஸ் நிலைப்பாடு என்ன ? ஆனானப்பட்ட ஆங்கிலத்தால் செய்யமுடியாததை மற்ற எந்த மொழியால் தமிழை அழிக்க முடியுமா ? திமுக தலைவர்கள் பள்ளிகளில் ஏன் மும்மொழி கற்பிக்க படுகிறது ? அதற்கு ஏன் பதில் இல்லை 50 லக்ஷம் பணக்கார மாணவர்கள் தமிழ் நாட்டில் ஏன் ஹிந்தி - படிக்கின்றனர்? ஏழை மாணவர்களுக்கு அந்த உரிமை இல்லையா? இந்தியாவில் மற்ற எல்ல மாநிலங்களும் ஏற்றுக்கொண்டதை திமுக ஏன் தடுக்கிறது? மாணவர் எதிர்காலத்தைப்பற்றிய முடிவை அவர்களிடமே விட்டு விடுங்கள் உங்கள் குழந்தைகள மாத்திரம் ஏன் மும்மொழி பள்ளிகளில் ?


Nirmal Senthivel
பிப் 24, 2025 07:02

மூன்று மொழி அல்ல ஐந்து மொழிகளை எடுத்துக் கொள்ளுங்கள் ஆனால் அது அரசு பள்ளிகளில் கண்டிப்பாக இருக்க கூடாது. அரசு பள்ளிகளில் இருக்கும் பட்சத்தில் நிச்சயமாக அதை அலுவல் மொழியாக கொண்டு வரப்படும். மூன்றாவது மொழி மூன்றாவது மொழி என்று கூறப்படுகிறது தவிர, ஹிந்தியை தவிர மற்ற மொழிகளை கற்றுக் கொடுப்பதற்கான வாய்ப்புகள் மிக குறைவு. அதற்கான போதுமான ஆசிரியர்கள் கிடையாது. மூன்றாவது மொழி கற்றுக்கொடுத்தது என்பது மறைமுகமாக இந்தியை தமிழகத்தில் அமல்படுத்துவது என்பதே ஒரே நோக்கம


Palanisamy T
பிப் 23, 2025 07:16

1. இப்போதாவது காங்கிரஸ் ஆட்சியில் கட்டாய படுத்தப் பட்ட மொழியென்று ஏற்றுக் கொண்டீர்கள். அந்த அளவிற்கு இந்த உண்மை அறியாது நம் மக்கள் இதுநாள்வரை தூங்கி கொண்டு இருந்தார்கள் என்பதுதான் உண்மை. கேள்வி கேட்டால் தேசியமென்றார்கள் தேசியமொழியென்றார்கள். ஒற்றுமை மொழியென்றார்கள். இந்தியமக்கள் மொழியென்றார்கள். இந்திய நாட்டிற்கு வந்த ஆங்கிலேயர்கள் இந்த மொழியை தேர்ந்தெடுத்து இந்த மொழியை மக்களுக்கு அறிமுகப் படுத்தினார்கள். அவர்கள் முதலில் வந்து குடியேறிய மாநிலம் குஜராத். தமிழர்களின் தேசபக்தியால் கட்டாயமான மறைமுகமான இந்தி திணிப்பை தமிழர்கள் அறியாது போய்விட்டனர். தேசபக்தி வேறு மொழிவேறு. இப்போது நடந்த மொழிவரலாற்று ஆசிரியர்களால் நடத்தப்பட்ட ஆய்வில் ஹிந்தி சமஸ்கிருத மொழிப்பொன்று இந்தோ ஆரியமொழி இனத்தை சேர்ந்ததென்பதை மொழியென்பதை உறுதியாக்கியுள்ளது. ஆதலால் இந்திமொழி இந்திய நாட்டின் மொழி இனத்தைச் சேர்ந்தவையல்ல என்பது உண்மை. இந்த உண்மையை முதலில் இந்திய அரசு ஏற்றுக் கொள்வார்களா? இந்த இரண்டு மொழிகளும் தமிழகத்தில் ஊடுருவினால் நாளை தமிழும் இல்லாமல் போகும் இது தேவையா?


புதிய வீடியோ