மேலும் செய்திகள்
வால்வோ அரசு ஏசி பஸ்களில் ஒரு மணி நேர பயணம் குறையும்
28 minutes ago
நாளை வேளாண் கண்காட்சி விவசாயிகளுக்கு அழைப்பு
28 minutes ago
இளநிலை நீட் தேர்வு பாடத்திட்டம் வெளியீடு
28 minutes ago
சென்னை:'கள்ளச்சாராய பலி சம்பவம் தொடர்பான வழக்கை, தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள போலீசார் விசாரிக்க தகுதி இல்லை.'சி.பி.ஐ.,க்கு மாற்ற வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றத்தில், அ.தி.மு.க., - பா.ம.க., தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் வலியுறுத்தினர்.கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்ததில், 66 பேர் பலியாகினர். இச்சம்பவம் தொடர்பாக, சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரிக்கின்றனர்.அனைவரும் விடுதலை
வழக்கை, சி.பி.ஐ.,க்கு மாற்றக்கோரி, அ.தி.மு.க., வழக்கறிஞர் பிரிவ் செயலர் இன்பதுரை; பா.ம.க., செய்தி தொடர்பாளர் கே.பாலு; பா.ஜ., வழக்கறிஞர் மோகன்தாஸ் தனித்தனியே மனுக்கள் தாக்கல் செய்தனர்.இம்மனுக்கள், பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார், நீதிபதி பி.பி.பாலாஜி அடங்கிய முதல் அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தன.வழக்கறிஞர் இன்பதுரை சார்பில், மூத்த வழக்கறிஞர் ராகவாச்சாரி வாதாடியதாவது:ஆண்டுதோறும் கள்ளச்சாராய சாவு சம்பவங்கள் நடக்கின்றன. 1998ல் ஓசூரில் கள்ளச்சாராயம் குடித்து, 100 பேர் பலியான வழக்கில், 16 ஆண்டு விசாரணைக்கு பின், குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.கடந்த ஆண்டில் விழுப்புரத்தில் நடந்த சம்பவத்துக்கு பின், மெத்தனால் வரும் வழியை கண்டுபிடித்து தடுத்திருந்தால், இந்தச் சம்பவம் தடுக்கப்பட்டிருக்கும்.கள்ளக்குறிச்சி எஸ்.பி.,யாக இருந்தவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அவர் மீது என்ன விசாரணை நடத்தப்பட்டது. தற்போது, அவரை தாம்பரத்தில் பணி அமர்த்தி உள்ளனர்.சி.பி.சி.ஐ.டி.,யும், மாநில அரசின் கட்டுப்பாட்டில் தான் உள்ளது. மாநில போலீசாருக்கு எதிராக குற்றம் சாட்டுவதால், வழக்கை விசாரிக்க அவர்களுக்கு தகுதி இல்லை. மக்களுக்கு, விசாரணையின் மீது நம்பிக்கை ஏற்பட வேண்டும். அதனால், சி.பி.ஐ.,க்கு மாற்றுவது தான் சரியானது.மெத்தனால், அருகில் உள்ள மாநிலங்களில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. அண்டை மாநிலங்களில் விசாரணை நடத்த வேண்டும் என்றால், சி.பி.ஐ.,க்கு மாற்றுவது தான் உகந்ததாக இருக்கும்.மெத்தனால் இங்கு வருவதை தடுக்காவிட்டால், அடுத்த ஆண்டும் எத்தனை பேர் பலியாவர் என்பது தெரியாது.இவ்வாறு அவர் வாதாடினார்.இதையடுத்து, அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன், ''மெத்தனால் எங்கிருந்து வந்தது என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,'' என்றார். விசாரணை அதிகாரியின் ரகசிய அறிக்கையையும், அட்வகேட் ஜெனரல் நீதிபதிகளிடம் தாக்கல் செய்தார்.சுதந்திரமான அமைப்புவழக்கறிஞர் பாலு சார்பில், மூத்த வழக்கறிஞர் என்.எல்.ராஜா வாதாடியதாவது:அரிதான வழக்காக இதைக்கருதி, சிறப்பு புலனாய்வுக்குழு அல்லது சி.பி.ஐ.,க்கு மாற்ற வேண்டும். போலீஸ் அதிகாரிகளை அரசே, 'சஸ்பெண்ட்' செய்துள்ளது. போலீசாருக்கும், கள்ளச்சாராயம் விற்பவர்களுக்கும் இடையில் தொடர்பு உள்ளதால், சுதந்திரமான அமைப்பு விசாரிக்க வேண்டும். சஸ்பெண்ட் செய்யப்பட்ட எஸ்.பி.,யை மீண்டும் பணி அமர்த்தியிருப்பது, மக்கள் மத்தியில் கேள்வியை எழுப்பி உள்ளது.புதுச்சேரி, கர்நாடகாவில் இருந்து மெத்தனால் எடுத்து வரப்படுவதால், சி.பி.ஐ., விசாரிப்பது முறையாக இருக்கும். போலீசார் சம்பந்தப்பட்டு உள்ளதால், விசாரணை அமைப்பை மாற்ற வேண்டும்.இவ்வாறு அவர் வாதாடினார்.இந்த வழக்கில் அரசு தரப்பில் பதில் அளிக்க, விசாரணையை, வரும் 21ம் தேதிக்கு முதல் அமர்வு தள்ளி வைத்தது.
28 minutes ago
28 minutes ago
28 minutes ago