உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / திண்டுக்கல் பா.ம.க.,வுக்கு எப்படி இருக்கு ?

திண்டுக்கல் பா.ம.க.,வுக்கு எப்படி இருக்கு ?

திண்டுக்கல் தொகுதியில் திமுக மற்றும் அதிமுக நேரடியாக போட்டியிடாதது பாமகவிற்கு சாதகம். இந்தநிலையில் அங்கு ஏற்கனவே அந்த தொகுதியில் பரீட்சியமான பெண் வேட்பாளரை பாமக நிறுத்தி இருப்பது, களத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 2011 ஆண்டில் திண்டுக்கல் சட்டமன்றத் தொகுதியில் பாமக போட்டியிட்டது. 2016 தேர்தலிலும் தனித்து களம் கண்டது பாமக. 2019 நாடாளுமன்றத் தேர்தலிலும் போட்டியிட்டது. 2021 தேர்தலில் ஆத்தூர் சட்டமன்றத் தேர்தலிலும் பாமக களம் கண்டது. தொடர்ந்து திண்டுக்கல்லில் பாமக போட்டியிடுவதால் இயற்கையாகவே பாமகவின் வாக்கு வாங்கி அங்கு அதிகரிக்க தொடங்கியுள்ளது.தொடர்ந்து திலகபாமா, அப்பகுதியில் கட்சி பணி செய்வதால் ,கட்சி கட்டமைப்பும் அதிகரித்திருப்பதால் இம்முறை பாமக இத்தொகுதியை பாஜக மற்றும் அமமுக உதவியுடன் கைப்பற்ற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

நாளை வேட்புமனு தாக்கல்

திண்டுக்கல் மக்களவை தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் களமிறங்கியுள்ள பாமக வேட்பாளர் திண்டுக்கல் திலகபாமா நாளை (மார்ச் 24) வேட்புமனு தாக்கல் செய்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ