உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நான் மத்திய அமைச்சராவது கடவுள் கையில் உள்ளது:மதுரையில் ஓ.பி.எஸ்., பேட்டி

நான் மத்திய அமைச்சராவது கடவுள் கையில் உள்ளது:மதுரையில் ஓ.பி.எஸ்., பேட்டி

மதுரை: 'நான் மத்திய அமைச்சராவது கடவுள் கையில்தான் உள்ளது' என மதுரையில் மீனாட்சி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்தபின் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.அவர் கூறியதாவது: நடந்து முடிந்த லோக்சபா தேர்தல், நாட்டை யார் ஆள வேண்டும் என்பதற்காக நடந்துள்ளது. பா.ஜ., பெரும்பாண்மையுடன் வெற்றிபெற்று மோடி மீண்டும் பிரதமராக வருவார். நான் பலனை எதிர்பார்த்து கட்சிப்பணி செய்பவன் அல்ல. என்னுடைய வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. நான் மத்திய அமைச்சராவது கடவுள் கையில்தான் உள்ளது.அரசு செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டும் இயக்கமாக அ.தி.மு.க., உரிமை மீட்புக் குழு செயல்பட்டு வருகிறது. யாரால் அ.தி.மு.க., சின்னாபின்னமாக்கப்பட்டது என அனைவருக்கும் தெரியும். அது தேர்தல் முடிவில் எதிரொலிக்கும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

saiprakash
ஜூன் 03, 2024 15:46

இவர் வேற நேரம் காலம் தெரியாம குறுக்க மறுக்க ஓடிகிட்டு


Mani . V
ஜூன் 03, 2024 04:08

எது அந்த ஒரே ஒரு பலாப்பழத்துக்கு மத்திய மந்திரி பதவி வேண்டுமாக்கும்?


Raja
ஜூன் 03, 2024 03:55

ippadithan rajini konjan naal munnadi sonnar.


மேலும் செய்திகள்







புதிய வீடியோ