உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நிர்வாகமும் தெரியல, அரசியலும் புரியல... பிரேமலதாவை விமர்சித்த அமைச்சர் சிவசங்கர்

நிர்வாகமும் தெரியல, அரசியலும் புரியல... பிரேமலதாவை விமர்சித்த அமைச்சர் சிவசங்கர்

பெரம்பலுார்: ''தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதாவிற்கு அரசு நிர்வாகமும், அரசியலும் தெரியவில்லை. அரசு திட்டங்களை கிண்டல் செய்வதை விட்டுவிட்டு அவர் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும்,'' என, தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.தமிழக அரசின் உத்தரவின்படி பெரம்பலுார் மாவட்டத்தில் உள்ள 2,000 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கும் விழா கலெக்டர் கற்பகம் தலைமையில் நடந்தது.

சொகுசு பயணம்

விழாவில், தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டா வழங்குவதற்கான ஆணைகளை வழங்கினார்.பின், அவர் அளித்த பேட்டி: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தி.மு.க., அமோக வெற்றி பெறுவது உறுதி. அதற்கு தமிழக முதல்வரின் இலவச பஸ் பயணத்திட்டம், புதுமைப்பெண் திட்டம், மகளிர் உரிமைத்தொகை திட்டம் என பல்வேறு திட்டங்களே காரணம். அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் சார்பில் புதிதாக 200 பஸ்கள் வாங்கப்பட்டுள்ளன.விரைவு போக்குவரத்து கழக பஸ்களில் தனியார் ஆம்னி பஸ்களில் உள்ளதைப் போல, செல்போன் சார்ஜ் வசதி மற்றும் படுக்கை, இருக்கை வசதி, லக்கேஜ் வைப்பதற்கான வசதி போன்ற அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. பயணியர் சிரமமின்றி சொகுசாக பயணிக்கலாம்.தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதா அரசு போக்குவரத்துக் கழகம் தனியார் மயமாக உள்ளதாக தெரிவித்துள்ளார். இந்தியாவிலேயே சுமார் 20,000 பஸ்கள் உள்ள மிகப்பெரிய போக்குவரத்துக் கழகம் தமிழக அரசு போக்குவரத்துக் கழகம். தற்போது 685 பேர் அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தில் டிரைவர், கண்டக்டராக பணியமர்த்தப்பட்டுள்ளனர். புதிதாக 7,200 பஸ்கள் வாங்குவதற்கு முதல்வர் உத்தரவிட்டு, 1,000 பஸ்கள் மக்கள் பயன்பாட்டிற்கு வந்திருக்கிறது. புதிதாக, 7,200 பஸ்களை வாங்கிவிட்டு 600க்கும் மேற்பட்டவர்களை பணியமர்த்தி விட்டு எப்படி அரசு போக்குவரத்துக் கழகத்தை தனியார் மயமாக்க முடியும். பிரேமலதா அரசு நிர்வாகம், அரசியல் தெரியாமல் பேசுகிறார். இலவச பஸ்கள், இலவசம் கொடுத்ததால் தான் போக்குவரத்து துறை உயிர் பெற்றிருக்கிறது. இது போக்குவரத்து துறை சார்பில் செய்யப்படும் செலவு அல்ல; இதற்காக தமிழக முதல்வர் நிதி வழங்கி வருகிறார். அந்த வகையில் இந்த ஆண்டு, 2,500 கோடி ரூபாய் தமிழக முதல்வர் போக்குவரத்து கழகத்திற்கு நிதி ஒதுக்கி உள்ளார். அந்த நிதி வருவதால் தான் போக்குவரத்து தொழிலாளர்கள் மாதந்தோறும் ஒன்றாம் தேதி ஊதியம் பெறுகின்றனர். மற்ற மாநிலங்களில் தாமதமாக வழங்குவது, சில நேரங்களில் மாதக்கணக்கில் தாமதமாக ஊதியம் வழங்குவது போன்ற நிகழ்வு நடைபெற்று வருகிறது.

கிண்டல் கூடாது

அதுபோல தமிழக போக்குவரத்துக் கழகத்தில் கிடையாது. இவ்வாறு சிறப்பாக போக்குவரத்துக் கழகம் செயல்படுவதற்கு காரணம் இலவச திட்டம் கொடுத்ததால் தான். அரசு திட்டங்களை பிரேமலதா கிண்டல் செய்வதை விடுத்து, பொதுமக்களுக்கான சேவையை செய்ய வேண்டும். பஸ் கட்டணம் உயர்வு என்பது தற்போது கிடையாது. மற்ற மாநிலங்களில் டீசல் விலை உயரும்போதெல்லாம் பஸ் கட்டணம் உயர்த்தப்படுகிறது. ஆனால், ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் பஸ் கட்டணத்தை உயர்த்தாமலேயே போக்குவரத்துக் கழகத்தை நடத்த வேண்டும் என, தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

Ganesan Vadivel
ஜூலை 13, 2024 20:31

யார் வேண்டுமானாலும் விமர்சனம் செய்யலாம் ஆனால் தங்கள் பதில் செயலினால் இருக்கவேண்டும். அதன் பொருட்டு மக்களே பதிலளிப்பார்கள் தற்போது சாதரண மனிதனின் கோரிக்கை கூட நிறைவேற்ற முடியாத நீங்கள் அதெல்லாம் சொல்வது சரியா? உங்கள் வாட்சப்பையே சீக்ரெட்டாக பார்க்கும் நீங்கள் பதிலும் சொல்வதில்லை மாணவர்கள் நலனுக்காக கேட்ட பேருந்து சேவையை கூட செய்திடவும் இல்லை - கணேசன்வடிவேல் மக்கள் பக்கம் சமூக பாதுகாப்பு விழிப்புணர்வு இயக்கம் அருங்கால் அரியலூர் 621707 தொடர்பு எண் : 7200252002


Barakat Ali
ஜூலை 12, 2024 17:27

அதிகார மமதையில் இருப்பவர்களுக்கு ஆலோசனை சொன்னால் ஏறாது .......


JANA VEL
ஜூலை 12, 2024 13:05

. முதலில் போக்குவரத்து தொழிலாளர் பிரச்சனைகள் தீர்க்க வழி பாருப்பா


jayaram
ஜூலை 12, 2024 11:30

பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்த்தி எத்தனை மாதங்கள் ஆகி விட்டது காரணம் தெரியாமல் முழிக்கும் கழக அரசு


ஆரூர் ரங்
ஜூலை 12, 2024 11:04

ஒரு நடத்துனர் உட்கார்ந்திருந்த சீட்டுடன் தெருவில் விழுந்தார். மந்திரி சார். சீட் பத்திரம்.


duruvasar
ஜூலை 12, 2024 11:02

நாலும் தெரிந்த நாவண்ணன் கூறினால் சரியாகத்தான் இருக்கும்.


Sundar R
ஜூலை 12, 2024 08:58

பஸ் பயணம் மாணவர்களுக்கு இலவசம். பெண்களுக்கு இலவசம். சரி. அரசு இதற்கான இழப்பீட்டுத் தொகையை போக்குவரத்து துறைக்கு அந்த ஊழியர்கள் சம்பளம், ஓய்வூதிய பலன்கள் செலவுகளை கொடுத்து ஈடு செய்கிறதா? அப்போதுதானே கடுமையாக உழைக்கும் போக்குவரத்து தொழிலாளர்கள் நலமுற வாழமுடியும். தற்போது சீரற்ற நிலையில் போக்குவரத்து துறை இருக்கிறது.


மோகனசுந்தரம்
ஜூலை 12, 2024 08:15

ஓய் இவனுங்களுக்கெல்லாம் பேச கற்றுக் கொடுக்கவே வேண்டாம். எப்படி எல்லாம் முட்டுக் கொடுக்கறான் பாருங்கள். எல்லாம் தெரிந்த நம்முடைய தமிழக முதல்வர் ஒவ்வொன்றையும் விரல் நுனியில் வைத்துள்ளார். ஐயகோ என்ன அப்பட்டமான பொய்.


Bellie Nanja Gowder
ஜூலை 12, 2024 06:53

என்னவோ MBA படித்து நிர்வாக திறமை உள்ளவர் போல் பேசுகிறார் இந்த அமைச்சர். தினம் தினம் அரசு பஸ்களின் அவல நிலையை ஒவ்வொருவரும் புகை படம் எடுத்து சமூக ஊடகங்களில் பதிவிடுவது இவருக்கு தெரியாதா?


கட்டத்தேவன்,,திருச்சுழி
ஜூலை 12, 2024 06:50

இரண்டுமே தமிழகத்திற்கு தேவையில்லாத ஆணி என்பதுதான் மக்களின் கருத்து.


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை