உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழகத்தின் மீது எனக்கு பாசம் உண்டு

தமிழகத்தின் மீது எனக்கு பாசம் உண்டு

சென்னை:சென்னை விமான நிலையத்தில், மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி அளித்த பேட்டி:பெட்ரோலியம் என்பது முற்றிலும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்டவை. அதுபற்றி கற்றுக் கொண்டபின், எது செய்ய வேண்டும்; செய்யக்கூடாது என்பது தெரியவரும். பெட்ரோல் விலை குறைப்பது பற்றி மட்டும் யோசிக்காதீர்கள்; அதற்கு சரியான வழி எது என்பது குறித்து யோசிக்க வேண்டும். கச்சா எண்ணெய், சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் பற்றி, நாம் அனைவரும் புரிந்து கொண்டால், விலை குறைப்பு பற்றி கேள்வி வராது.சபரிமலையை யாரும் தொட முடியாது; தொட்டவர்கள் எல்லாம் எங்கோ போய் உட்கார்ந்து விட்டனர். தமிழகத்தை நான் நேசிக்கிறேன்; நான் ஆரம்ப கால சினிமா வாய்ப்பு தேடிய போது, எனக்கு உறங்குவதற்கு இடம் தந்தது சென்னை. தமிழகத்தின் மீது எனக்கு எப்போதும் பாசம் உள்ளது.இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை