உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / போதை புழக்கத்தை கட்டுப்படுத்த முடியவில்லையெனில் சிறப்பு குழு போடுவோம்! : உயர் நீதிமன்றம்

போதை புழக்கத்தை கட்டுப்படுத்த முடியவில்லையெனில் சிறப்பு குழு போடுவோம்! : உயர் நீதிமன்றம்

சென்னை: 'தமிழகத்தில், போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த, திருப்திகரமான நடவடிக்கை இல்லை என்றால், சிறப்பு புலனாய்வுக்குழு வசம் ஒப்படைக்க, பரிசீலிக்க நேரிடும்' என, சென்னை உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.சென்னையில் குடிசைவாசிகளை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பெண்ணுரிமை இயக்கம் சார்பில் தொடரப்பட்ட வழக்கில், 'துரைப்பாக்கம், பெரும்பாக்கம் உள்ளிட்ட 4 இடங்களில் மாற்று இடம் வழங்கப்பட்டுள்ளது. அங்கு, அடிப்படை வசதிகள் இல்லை' என, கூறப்பட்டது. மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், நான்கு இடங்களிலும் உள்ள வசதிகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க, அட்வகேட் கமிஷனரை நியமித்தது.அட்வகேட் கமிஷனர் ஆய்வு செய்து தாக்கல் செய்த அறிக்கையில், கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள், இந்த பகுதிகளில் தாராளமாக கிடைப்பதாகக் கூறப்பட்டது. இவ்வழக்கு, பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார், நீதிபதி பி.பி.பாலாஜி அடங்கிய முதல் அமர்வு முன், விசாரணைக்கு வந்தது. ஏற்கனவே உயர் நீதிமன்றம் உத்தரவிட்டபடி, போலீஸ் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. திருவள்ளூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலரும், அறிக்கை அளித்தார்.

இதையடுத்து, முதல் அமர்வு பிறப்பித்த உத்தரவு:

போதைப்பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்த, தற்போது நியமிக்கப்பட்டுள்ள போலீசாரின் எண்ணிக்கை போதுமானது அல்ல. தமிழகம் முழுதும் போதைப்பொருள் எளிதாகக் கிடைப்பதை, போலீஸ் அதிகாரிகளும், கூடுதல் அட்வகேட் ஜெனரலும் மறுக்கவில்லை. போதிய எண்ணிக்கையில் போலீசார் அடங்கிய சிறப்பு புலனாய்வுக் குழுவை அரசு ஏற்படுத்தி, தீவிர நடவடிக்கையில் ஈடுபடவில்லை என்றால், எந்த மாற்றமும் ஏற்படாது; இல்லையென்றால், உரிய உத்தரவை பிறப்பிக்க, இந்த நீதிமன்றம் தயங்காது.இரண்டு வாரங்களில், அரசு தரப்பில் எடுத்த நடவடிக்கைக்கான அறிக்கையை தாக்கல் செய்வதாக, கூடுதல் அட்வகேட் ஜெனரல் தெரிவித்துள்ளார். திருப்திகரமான நடவடிக்கைகள் இல்லையென்றால், இந்தப் பிரச்னையை சிறப்பு புலனாய்வுக் குழுவிடம் ஒப்படைக்க நேரிடும். அரசும், டி.ஜி.பி.,யும் உரிய மனுவை தாக்கல் செய்ய வேண்டும். செங்கல்பட்டு மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவும், அறிக்கை அளிக்க வேண்டும்.இவ்வாறு முதல் அமர்வு உத்தரவிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Ravi Kulasekaran
செப் 18, 2024 20:56

யாரும் உண்மையானவர்கள் அல்ல எல்லாம் பணத்துக்கும் பதவிக்கும் விலை போககூடியவர்களின் காலம்.லஞ்சம்,பதவி இருந்தால் நீதிமன்றத்தை ஏமாற்ற ஆயிரம் வழிகள் சட்டம் ஓரு இருட்டறை அதில் வங்கியின் வாதம் ஓரு மணி விளக்கு.


sundaran manogaran
செப் 12, 2024 12:31

காவல்துறையில் 90சதவீதம் பேருக்கு கூடுதல் வருவாய் ஈட்டித் தரும் போதை பொருள்களை காவல் துறையால் தடைசெய்ய முடியாது... காவல்துறை இல்லாமல் ஓரணுவும் அசையாது ...


கூமூட்டை
செப் 12, 2024 10:49

இது திராவிட மாடல் அது இருந்தால் இது தான் திராவிட கூமூட்டை


sankar
செப் 12, 2024 09:29

ஏற்கெனவே ஏகப்பட்ட குழுக்கள் புழுக்களாக நெளிந்துகொண்டு இருக்கின்றன


Kalyanaraman
செப் 12, 2024 08:22

40 - 45 வருடங்களுக்கு மேலாக தேங்கி இருக்கும் வழக்குகளுக்கு விடை காண இந்த நீதிமன்றங்களால் முடியவில்லை. பல காலமாக சென்னை சைதாப்பேட்டை, பூந்தமல்லி நீதிமன்றங்களைப் போல் தமிழகத்தில் பல நீதிமன்றங்கள் மீன் மார்க்கெட்டையும் விட மிகவும் மோசமாக இருக்கிறது. இவற்றை சீரமைக்க முடியவில்லை. இருப்பினும் நமது நீதிமன்றங்கள் உயிர்ப்புடன் செயல்பட்டு வருகிறது.


Lion Drsekar
செப் 12, 2024 07:58

போட்டு ?? இந்த மண்ணிலா ?? விழலுக்கு இறைத்த நீர் . வந்தே மாதரம்


நிக்கோல்தாம்சன்
செப் 12, 2024 07:34

என்னது ஜாபர் எமிர் க்கு எதிராக நீதிமன்றமா?


Minimole P C
செப் 12, 2024 07:32

You are right sir.


Mani . V
செப் 12, 2024 07:28

போட்டு? முதலில் டாஸ்மாக் சரக்கு போதைப் பொருளா, இல்லையா? அதைச் சொல்லுங்க. அப்புறம் மற்றதை அறுத்துத் தள்ளலாம்.


Palanisamy T
செப் 12, 2024 07:01

போதைப் பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்த நீதிமன்றத்தின் இந்தக் கண்டிப்பான எச்சரிக்கையை மக்கள் வரவேற்க வேண்டும். இது அரசின் கடமை. நீதிமன்றம் சொல்லித்தான் செய்ய வேண்டுமா? தேர்தலில் ஆட்சியாளர்களை தேர்வுச் செய்யும் போது வாக்காளர்கள் பொறுப்பில்லாமல் செய்யும் தவறுகள் நாட்டை மோசமான அழிவுப் பாதைக்கு கொண்டு செய்வதை அவர்கள் ஏன் உணர மறுக்கின்றார்கள் போதைப் பொருள் புழக்கம் சின்னவிஷயமில்லை.


சமீபத்திய செய்தி