உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 40 சதவீத கமிஷன் கேட்டால் எங்கிருந்து முதலீடுகள் வரும்? அண்ணாமலை கேள்வி

40 சதவீத கமிஷன் கேட்டால் எங்கிருந்து முதலீடுகள் வரும்? அண்ணாமலை கேள்வி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை :

தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை அறிக்கை:

ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகளாக, கோவை இளைஞர்களின் வேலைவாய்ப்பு குறித்து கவலை இல்லாமல் இருந்தார் முதல்வர் ஸ்டாலின். தமிழக பா.ஜ., சார்பில் தேர்தல் வாக்குறுதிகளில், கோவையில், 'செமிகண்டக்டர்கள்' தயாரிப்பது குறித்து குறிப்பிட்டதற்குப் பின், கோவை குறித்து ஞாபகம் வந்திருக்கிறது.தமிழகத்தில் தொழில் முதலீடு செய்ய வருபவர்களிடம், 40 சதவீத கமிஷன் வழங்க வேண்டும், முதல்வர் மருமகனை நள்ளிரவில் சந்திக்க வேண்டும், முதல்வரின் குடும்ப ஆடிட்டரை சந்திக்க வேண்டும் என்றெல்லாம் நிபந்தனைகள் விதித்தால், எந்த நிறுவனம் தமிழகத்தில் முதலீடு செய்ய முன்வரும்?தங்களுக்கு சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்பு அளிக்கும் மாநிலங்களில் தான் முதலீடு செய்ய நிறுவனங்கள் முன்வரும். தங்கள் மீது முழு தவறையும் வைத்துக் கொண்டு, தேர்தல் நேரத்தில் மட்டும் இளைஞர்கள் மீது அக்கறை இருப்பது போல் நடிக்க வேண்டாம் ஸ்டாலின்.கோவை மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழக இளைஞர்களுக்கும், தொழில்துறையில் தி.மு.க., செய்து வரும் துரோகங்களை, ஜூன், 4 தேர்தல் முடிவுகளுக்குப் பின், பா.ஜ., சரிசெய்யும். பல ஆண்டுகளாக புறக்கணிக்கப்பட்டு வரும் கோவையை மீட்டெடுப்பதே எங்கள் முக்கியப் பணி.இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

Venkataraman
ஏப் 16, 2024 12:55

The first person who has boldly told that one paisa will be given for getting vote is most important thing to be learnt from this electionthe Dravidian parties have taken advantage of the poor state of the downtrodden and resorted to bribing them to get votes The people are fools to that extent that they dont realize that they will have to bribe for getting their rightful things through their elected representatives In short, what money is pumped out now by the politicians, will be recovered by them by getting bribes and commission for the work that is done for the public with public tax payers moneythe only way to turn this tide would be for the increase in voting percentage If percent of the people vote, even if % are below poverty line and bribed, still the remaining % would be the dominant force who can upset the parties or individuals who count on cash for votes policy The Godfather for this culture of cash for votes is no doubt the Dravidian parties Time had given one chance for change in G K Mopannar in which people failed to realize Now again time is giving another chance for change in Annamalai in If people fail to realize the bare truth about Dravidian politics, people will only continue to suffer further


venkatakrishna
ஏப் 15, 2024 06:48

உண்மையான வார்த்தை இது மட்டுமல்ல அனைத்து அரசு ஒப்பந்தப் பணிகளிலும் கமிஷன் கொடிகட்டிப் பறக்கிறது


Dr.Mak lodhi
ஏப் 14, 2024 18:12

50% கமிஷன் பிஜேபி போர்முலா ட ம் கே


Dr.Mak lodhi
ஏப் 14, 2024 18:08

௪௦% கமிசன் பிஜேபி போர்முலா ??? போர் எக்சாம்ப்லே பிரிவியஸ் பிஜேபி கோவ்ட் இந்த கர்நாடக


venugopal s
ஏப் 14, 2024 16:56

முதலில் உங்கள் பாஜக ஆளும் உத்தரப்பிரதேசம் ,மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் ,சத்தீஸ்கர், பீகார் மாநிலங்களில் ஏன் முதலீடுகள் வரவில்லை என்று போய் ஆராய்ச்சி செய்யுங்கள் அண்ணாமலை அவர்களே! இந்தியாவிலேயே மஹாராஷ்டிரா ,குஜராத் மாநிலங்களுக்கு இணையாக அதிக மூதலீடுகளை ஈர்த்த மாநிலம் நம் தமிழகம் தான்!


INDIAN
ஏப் 14, 2024 15:43

ஏற்கனவே கர்நாடக பிஜேபி அரசு % சதவீதம் கமிஷன் வாங்கிய சமாச்சாரம்


INDIAN
ஏப் 14, 2024 15:41

கடந்த பத்து வருடங்களாக பிரதமர் மோடி இளைஞர்களை பற்றி என்ன கவலை பட்டார் என்று சொல்லி தெரிய வேண்டியதில்லை


krishna
ஏப் 14, 2024 11:59

COMMISSION COLLECTION CORRUPTION IDHUDHAAN SIR DRAVIDA MODEL KADAMAI KANNIYAM KATTUPPADU.


Kasimani Baskaran
ஏப் 14, 2024 10:37

சம்பாதித்த சொத்துக்களை ரவுண்டு டிரிப் மூலம் திரும்பவும் இந்தியாவுக்கு கொண்டு வந்து அதன் பின்னர்தான் முதலீடுகளை ஈர்ப்பார்கள் அப்பொழுதுதானே சம்பாதிக்க முடியும் தர்மத்துக்கு முதலீடு கொண்டுவர் அவர்கள் என்ன பாஜக வா?


அப்புசாமி
ஏப் 14, 2024 10:10

அப்போ டாட்டா, அதானி, அம்பானிகள் தமிழ்நாட்டில் கமிஷன் குடுத்துதான் முதலுடு பண்ணியிருக்காங்ஜளா கோவாலு?


hari
ஏப் 14, 2024 14:05

கேட்ட கேள்விக்கு இது பதில் இல்லையே கோவாலு


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை