மேலும் செய்திகள்
எய்ட்ஸ் சங்க ஊழியர்கள் ஜன.4ல் உண்ணாவிரதம்
2 hour(s) ago
சென்னை:சொத்து விற்பனையில், பொது அதிகார ஆவண பதிவு கட்டண உயர்வுக்கான அரசிதழ் அறிவிப்பை பதிவுத்துறை வெளியிட்டுள்ளது. வீடு, மனை விற்பனை, நிறுவனங்கள் பதிவு தொடர்பான ஆவணங்களின் பதிவு கட்டணங்களை மாற்றி அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதில், பெரும்பாலான இனங்களில், 20 ரூபாய், 50 ரூபாய் என்று இருக்கும் கட்டணங்கள், 1,000 ரூபாயாக மாற்றி அமைக்கப்படும் என, அரசு அறிவித்தது. இதற்கான மசோதா, 2023ல் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. இதன் அடிப்படையில் பதிவு சட்டத்தில் உரிய திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. இதன்படி, தத்தெடுத்தல் பத்திரத்துக்கான கட்டணம், 100 ரூபாயில் இருந்து, 1,000 ரூபாயாக உயர்த்தப்பட்டது. பிரமாண பத்திரம் பதிவு செய்ய, 20 ரூபாய் கட்டணம், 2,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. ஒப்பந்தம் பதிவு கட்டணம், 20 ரூபாயில் இருந்து, 2,000 ரூபாயாகவும், நிறுவன பதிவு கட்டணம், 300 ரூபாயில் இருந்தது; தற்போது, 10 லட்சம் ரூபாய்க்கு, 500 ரூபாய் என்ற அடிப்படையில் உயர்த்தப்பட்டுள்ளது. ரத்து ஆவண பதிவு கட்டணம், 50 ரூபாயில் இருந்து, 1,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதில், வெளியார் பெயரில் பதிவு செய்யப்படும் பொது அதிகார ஆவணத்துக்கான கட்டணம், அந்த சொத்தின் சந்தை மதிப்பில், 1 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. அத்துடன், குடும்ப உறுப்பினர்களுக்கான பொது அதிகார பதிவு கட்டணங்களும் உயர்த்தப்பட்டுள்ளன. இது தொடர்பான அரசாணையை, பதிவுத் துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ளார்.
2 hour(s) ago