உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / காற்றாலை, சோலார் நிறுவுதிறன் உயர்வு

காற்றாலை, சோலார் நிறுவுதிறன் உயர்வு

சென்னை: கன்னியாகுமரி, திருநெல்வேலி, துாத்துக்குடி, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில், காற்றாலை மின் நிலையம் அமைக்க, சாதகமான சூழல் உள்ளது. சூரியசக்தி மின் உற்பத்திக்கு, சூரியனின் வெப்பத்தை விட வெளிச்சமே அவசியம். தென்மாவட்டங்களில், அதிக நேரம் சூரிய வெளிச்சம் இருப்பதால், மின் நிலையம் அமைக்க, சாதகமான சூழல் நிலவுகிறது.இதனால், பெரிய நிறுவனங்கள், காற்றாலை, சூரியசக்தி மின் நிலையங்களை அமைத்து வருகின்றன.கடந்த, 2023 - 24ம் ஆண்டில் மட்டும், 276 மெகா வாட் காற்றாலை மற்றும் 1,261 மெகாவாட் திறனில் சூரியசக்தி மின் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.அந்த ஆண்டு நிலவரப்படி, தமிழகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒட்டுமொத்த காற்றாலை நிறுவு திறன், 9,015 மெகா வாட்டாகவும்; சூரியசக்தி மின் நிறுவு திறன், 1,261 மெகா வாட்டாகவும் உள்ளது.

ஆண்டு வாரியாக நிறுவு திறன் (மெகா வாட்)

-------------------------------------------------------ஆண்டு - காற்றாலை - சூரியசக்தி - மேற்கூரை சூரியசக்தி-------------------------------------------------------2019/ 20 - 55 - 1,276 - 442020/ 21 - 43 - 348 - 61 2021/ 22 - 49 - 763 - 552022/ 23 - 124 - 1,192 - 1012023/ 24 - 276 - 1,261 - 202*


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை