உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பாகிஸ்தானை அழிக்கும் திறன் இந்திய ராணுவத்திற்கு உண்டு: கவர்னர் ரவி

பாகிஸ்தானை அழிக்கும் திறன் இந்திய ராணுவத்திற்கு உண்டு: கவர்னர் ரவி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சென்னை, தரமணியில் உள்ள அம்பேத்கர் சட்ட பல்கலை வளாகத்தில் நடந்த கார்கில் போர் வெற்றி விழாவில், கவர்னர் ரவி பேசியதாவது:கார்கில் போரில், முன்னாள் பிரமதர் வாஜ்பாய் அமைதியை நிலைநாட்ட வேண்டும் என நினைத்தார். பாகிஸ்தானிடமும் அதையே எதிர்பார்த்தார். அவர்கள் அதற்கு ஒத்துழைக்கவில்லை. இப்படி நம் பிரதமர்கள் போர் தேவையில்லை; அமைதி மட்டுமே நிலவ வேண்டும் என எண்ணினர். பிரதமர் மோடியும் அதே வழியை கடைப்பிடித்தார்.கடந்த கால போர்களில் நாம் எவ்வளவு வீரர்களை இழந்தோம். அதற்கு காரணம், எதிரியின் குணம் நம்மிடம் இல்லை. அவர்கள் அழிக்க நினைத்தனர்; நாம் அமைதியை நோக்கினோம். வரைபடத்தில் இருந்து பாகிஸ்தானை ஒட்டுமொத்தமாக அழிக்கும் திறன் நம் இந்திய ராணுவத்திடம் உள்ளது.தாக்குதல் நடத்துவதையே திட்டமாக வைத்து வந்த பாகிஸ்தான், அதற்கான விலையை உரிய நேரத்தில் பெறும். 25 ஆண்டுகளுக்கு முன் நம்மிடம் இருந்த ஆயுதத்தை வைத்தே, நாம் போர் செய்தோம். இன்று அந்த நிலை மாறி சிறப்பாக உள்ளது. ஆயுதப்படை, விமானப்படை, ராணுவம், சைபர் பாதுகாப்பு என, அனைத்திலும் நாம் சிறந்து விளங்கி வருகிறோம்.பிற நாடுகளுக்கு அனுப்பும் வகையில், ராணுவ துறையில் உற்பத்தியும் நல்ல முன்னேற்றத்தை கண்டுள்ளது. தனியார் துறையின் ஒட்டுமொத்த ஒத்துழைப்போடு, நம் ராணுவ உற்பத்தி அதிகரித்துள்ளது.இவ்வாறு பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

venugopal s
ஜூலை 27, 2024 12:58

உங்களுக்கு பதவி நீட்டிப்பு உண்டு!


பல்லவி
ஜூலை 27, 2024 07:43

அதுக்கெல்லாம் நல்ல மனசு வேணும்


Matt P
ஜூலை 27, 2024 02:18

வலுவா இருக்க வேண்டியது தான். அழிப்பதை மறந்து ஆக்கபூர்வமாக நினைக்கலாமே மனதில் உறுதி வேண்டும் மனதில் இரக்கமும் வேண்டும்


hari
ஜூலை 27, 2024 06:07

ஒரு கன்னத்தில் அறைந்தால் இன்னொரு கன்னத்தை காட்டுவீரா?


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை