உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சாக்கடையில் சங்கமித்த சக்கரம் அரசு பஸ்சில் தொடருது அவலம்

சாக்கடையில் சங்கமித்த சக்கரம் அரசு பஸ்சில் தொடருது அவலம்

ஆயக்குடி: திண்டுக்கல் மாவட்டம் பழநியில் இருந்து நேற்று காலை தீர்த்த கவுண்டன் வலசுக்கு பயணிகளுடன் புறப்பட்ட அரசு டவுன் பஸ் வேப்பன் வலசு அருகே சென்ற போது முன்பக்க சக்கரம் கழன்று ஓடியது. சுதாரித்த டிரைவர் பஸ்சை நிறுத்தியதால் பயணிகள் தப்பினர்.தமிழகத்தில் ஓடும் அரசு பஸ்களில் பெரும்பாலானவை கண்டமான நிலையில் லொடக்கு பஸ்களாக வலம் வருகின்றன. இதில் பயணிக்கும் மக்கள் ஒரு வித அச்சத்துடனே பயணிக்கின்றனர். பழநியிலிருந்து தீர்த்த கவுண்டன் வலசு கிராமத்திற்கு நேற்று காலை 9:40 மணிக்கு பயணிகளுடன் டவுன் பஸ் புறப்பட்டது. டிரைவர் நீதிபாண்டியன் 54, ஓட்டினார். ஆயக்குடி அமர பூண்டி வழியாக வேப்பன் வலசு அருகே வரும்போது பஸ்சின் முன்பக்க சக்கரம் கழன்றோடி ரோட்டோர சாக்கடையில் விழுந்தது.பஸ்சில் இருந்த பயணிகள் அலறினர். சுதாரித்த டிரைவர் பஸ்சை பாதுகாப்பாக நிறுத்தினார். பயணிகளோ தப்பித்தோம் பிழைத்தோம் என்று பஸ்சிலிருந்து இறங்கி பெருமூச்சுவிட்டனர். பின் அவ்வழியாக வந்த வேறு பஸ்சில் ஏறி சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி