உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நெல் கொள்முதல் குறைவை அரசு ஆராய்வது அவசியம்

நெல் கொள்முதல் குறைவை அரசு ஆராய்வது அவசியம்

சென்னை: 'நெல் கொள்முதல் நிலையங்களில், கொள்முதல் குறைந்ததற்கான காரணங்களை, அரசு ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, பா.ம.க., தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். அவரது அறிக்கை:தமிழக நுகர்பொருள் வாணிப கழகம் வாயிலாக கொள்முதல் செய்யப்படும் நெல்லின் அளவு, கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், 10 லட்சம் டன் குறைந்துள்ளது. நடப்பு கொள்முதல் ஆண்டு ஆகஸ்ட் வரை இருந்தாலும், இனி வரும் மாதங்களில் நெல் கொள்முதல் பெரிய அளவில் நடக்க வாய்ப்பு இல்லை. காவிரியில் கர்நாடக அரசு தண்ணீர் திறக்கவில்லை என்பதால், பாசன பரப்பு கணிசமாகக் குறைந்தது. ஆனால், நெல் கொள்முதல் அளவு குறைந்ததற்கு, இதை மட்டுமே காரணமாகக் கூற முடியாது.நெல் கொள்முதல் அளவு குறைந்தால், அரசிற்கு ஊக்கத்தொகை வழங்குவது மிச்சமாகும். அதை நினைத்து, அரசு மனநிறைவு அடையக்கூடாது. ரேஷன் கடைகளில் போதிய அரிசி கிடைக்காத நிலை ஏற்படும். வெளிச்சந்தையில் அரிசி விலை பெருமளவு உயரும். ஏழை, எளிய மக்கள், அரிசியை வாங்க முடியாத நிலை உருவாகும்.உணவு பாதுகாப்புக்கு பெரும்அச்சுறுத்தல் ஏற்படுத்தும். இதை உணர்ந்து, நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் குறைந்ததற்கான காரணங்களை, அரசு ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அன்புமணி கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை