மேலும் செய்திகள்
பைக் மீது கார் மோதல்: தந்தை, மகன் பலி
13-Feb-2025
உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டை அருகே சாலையை கடக்க முயன்ற ஜார்கண்ட் மாநில கால்நடை மருத்துவக்கல்லுாரி மாணவர் கார் மோதி இறந்தார்.ஜார்க்கண்ட் மாநிலம், தன்பத் மாவட்டம், பஸ்ஜோராவை சேர்ந்த பிரகலாத்மகத்தோ மகன் சஷாங்குமார்சிவம், 23; அதே மாநிலத்தில் உள்ள பீர்சா அக்ரிகல்ச்சுரல் கால்நடை மருத்துவக் கல்லூரியில், 4ம் ஆண்டு படித்து வந்தார்.இந்நிலையில் அங்கு பயிலும், 90 மாணவ, மாணவியர், கடந்த 18ம் தேதி ரயிலில் கல்விச்சுற்றுலாவிற்கு சென்னை வந்தனர். அங்கு, வேப்பேரி, கால்நடை மருத்துவக் கல்லுாரியை பார்த்துவிட்டு, டிராவல்ஸ் மூலம் புதுச்சேரிக்கு வந்தனர்.அங்கிருந்து நேற்று முன்தினம் மாலை கோயம்புத்துாருக்கு பஸ்சில் புறப்பட்டனர். இரவு 9.30 மணிக்கு உளுந்தூர்பேட்டை அடுத்த ஏ.குமாரமங்கலம் அருகே ஓட்டலில் பஸ் நின்றது.அப்போது மாணவர், சஷாங்குமார்சிவம், ஓட்டலுக்கு எதிரே உள்ள டீக்கடையில் நொறுக்குத்தீனி வாங்க சாலையை கடக்க முயன்றார்.அப்போது, சேலத்தில் இருந்து விழுப்புரம் நோக்கி வந்த, சென்னை அடுத்த திருநின்றவூரை சேர்ந்த செல்வக்குமார் மகன் சதீஷ்குமார்,30; ஓட்டி வந்த கார் மாணவர் சஷாங்குமார்சிவம் மீது மோதியது. அதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.விபத்து குறித்து உளுந்துார்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.உளுந்துார்பேட்டை பிப். 26--உளுந்துார்பேட்டை அருகே சாலையை கடக்க முயன்ற ஜார்கண்ட் மாநில கால்நடை மருத்துவக்கல்லுாரி மாணவர் கார் மோதி இறந்தார்.ஜார்க்கண்ட் மாநிலம், தன்பத் மாவட்டம், பஸ்ஜோராவை சேர்ந்த பிரகலாத்மகத்தோ மகன் சஷாங்குமார்சிவம், 23; அதே மாநிலத்தில் உள்ள பீர்சா அக்ரிகல்ச்சுரல் கால்நடை மருத்துவக் கல்லூரியில், 4ம் ஆண்டு படித்து வந்தார்.இந்நிலையில் அங்கு பயிலும், 90 மாணவ, மாணவியர், கடந்த 18ம் தேதி ரயிலில் கல்விச்சுற்றுலாவிற்கு சென்னை வந்தனர். அங்கு, வேப்பேரி, கால்நடை மருத்துவக் கல்லுாரியை பார்த்துவிட்டு, டிராவல்ஸ் மூலம் புதுச்சேரிக்கு வந்தனர்.அங்கிருந்து நேற்று முன்தினம் மாலை கோயம்புத்துாருக்கு பஸ்சில் புறப்பட்டனர். இரவு 9.30 மணிக்கு உளுந்தூர்பேட்டை அடுத்த ஏ.குமாரமங்கலம் அருகே ஓட்டலில் பஸ் நின்றது.அப்போது மாணவர், சஷாங்குமார்சிவம், ஓட்டலுக்கு எதிரே உள்ள டீக்கடையில் நொறுக்குத்தீனி வாங்க சாலையை கடக்க முயன்றார்.அப்போது, சேலத்தில் இருந்து விழுப்புரம் நோக்கி வந்த, சென்னை அடுத்த திருநின்றவூரை சேர்ந்த செல்வக்குமார் மகன் சதீஷ்குமார்,30; ஓட்டி வந்த கார் மாணவர் சஷாங்குமார்சிவம் மீது மோதியது. அதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.விபத்து குறித்து உளுந்துார்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
13-Feb-2025