உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அமைச்சர்கள் மீதான வழக்கில் இன்று தீர்ப்பு

அமைச்சர்கள் மீதான வழக்கில் இன்று தீர்ப்பு

சென்னை:சொத்துக்குவிப்பு வழக்கில், அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் ஆகியோர் விடுவிக்கப்பட்டதற்கு எதிராக, தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்குகளில், சென்னை உயர் நீதிமன்றம், இன்று உத்தரவு பிறப்பிக்கிறது.வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்கள் சேர்த்ததாக, அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, ராமச்சந்திரன் ஆகியோருக்கு எதிராக, அ.தி.மு.க., ஆட்சியின் போது வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளில் மேல் விசாரணை நடத்திய லஞ்ச ஒழிப்புத் துறை, அறிக்கையை, சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தன. அதன் அடிப்படையில், வழக்கில் இருந்து இவர்களை விடுவித்து, சிறப்பு நீதிமன்றங்கள் உத்தரவிட்டிருந்தன.இந்த உத்தரவுகளை மறுஆய்வு செய்யும் விதமாக, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தாமாக முன்வந்து வழக்கைகளை விசாரணைக்கு எடுத்தார். இரு தரப்பிலும் மூத்த வழக்கறிஞர்களின் வாதங்கள் முடிந்த நிலையில், தேதி குறிப்பிடாமல் உத்தரவை, நீதிபதி தள்ளி வைத்திருந்தார். இந்நிலையில், இந்த வழக்குகளில், இன்று, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், உத்தரவு பிறப்பிக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி