உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வெறும் 3 லட்சம் ரூபாயா; மனசாட்சியே இல்லையா? நியாயத்தை கேட்கிறார் ராமதாஸ்

வெறும் 3 லட்சம் ரூபாயா; மனசாட்சியே இல்லையா? நியாயத்தை கேட்கிறார் ராமதாஸ்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: பணியின் போது மின்சாரம் தாக்கி உயிரிழந்த மின் ஊழியர் குடும்பத்துக்கு வெறும் 3 லட்சம் ரூபாய் தான் நிவாரணமா; மனசாட்சி இல்லையா என்று கேள்வி எழுப்பியுள்ளார், பா.ம.க., நிறுவனர் டாக்டர் ராமதாஸ்.

இரங்கல்

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;- அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஒன்றியம் கல்லாத்தூரைச் சேர்ந்த மின்வாரியப் பணியாளர் செந்தில்குமார் என்பவர் பணியில் இருந்த போது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மின்வாரியம் தான் பொறுப்பு

பணியில் இருக்கும் போது செந்தில்குமாருக்கு ஏற்பட்ட இறப்புக்கு மின்சார வாரியம் தான் பொறுப்பேற்க வேண்டும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு வாழ்வாதாரத்தை உறுதி செய்ய வேண்டியது அரசின் கடமை. ஆனால், மறைந்த செந்தில்குமாரின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் மட்டும் இழப்பீடு வழங்கி விட்டு தமிழக அரசு ஒதுங்கிக் கொண்டது. இது நியாயமல்ல.

ரூ.25 லட்சம் இழப்பீடு

மனசாட்சியுடனும், மனிதநேயத்துடனும் மேற்கொள்ள வேண்டிய பொறுப்புகளை அரசு தட்டிக்கழிக்கக் கூடாது. செந்தில் குமாரின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க அரசு முன்வர வேண்டும்., எனக் குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 22 )

Seetharamu Ramu
ஆக 13, 2024 15:14

ஐயா மாவட்டத்தை எல்லாம் பிரிச்சுட்டீங்க அதே மாதிரி இந்த ஆதரவற்ற விதவைகள் அவங்களுக்கு வேலை தரேன்னு சொன்னீங்க ஏதோ ஒரு வேலை கொடுக்கலாம்ல அரசு வேலை பிள்ளைங்கள வச்சுட்டு ரொம்ப கஷ்டப்படுறோம் இது நடைமுறைக்கு கொண்டு வாங்க ஐயா ரொம்ப நல்லா இருப்பீங்க கருத்தா நினைக்காதீங்க ஒரு வேண்டுதலாக சொல்கிறோம் சொல்லுறோம்


V RAMASWAMY
ஆக 12, 2024 21:39

கள்ளச்சாராயம் குடித்து இறந்தால்தான் அதிக நஷ்ட ஈடு கிடைக்கும்.


தர்மராஜ் தங்கரத்தினம்
ஆக 12, 2024 21:32

கள்ளச்சாராயம் குடித்து பலியானால் பத்து லட்சம் ........


Ramesh Sargam
ஆக 12, 2024 21:19

திமுகவினரிடம் மனசாட்சியை எதிர்பார்ப்பது நமது குற்றம்.


PARTHASARATHI J S
ஆக 12, 2024 20:49

அரசின் நிவாரண கொள்கை நகைப்பாகவும், வேதனையாகவும் இருக்கிறது. சாதாரண மக்களும் விமர்சிக்கும் அளவு கேவலமான ஆட்சி நடத்துகிறார்கள்.


rama adhavan
ஆக 12, 2024 19:37

எதற்கு அரசு தனி தனியாகப் பணம் கொடுத்து அரசு நிதியை வாரி இறைக்க வேண்டும்? பெரிய கொடை வள்ளல் போல் பெயர் பெற வேண்டும்? மொத்தமாக எல்லா மரணத்திற்கும் ஒவ்வொன்றுக்கு இவ்வளவு கருணை தொகை என பாலிசி வகுத்து ஆண்டுக்கு ஒரு காப்பீடு பாலிசி வாங்கி வைத்தால் அரசின் அறிவுரைப்படி இன்சூரன்ஸ் கம்பெனி கொடுத்து விடுமே? ரயில், விமான இழப்புகளுக்கு இப்படி தானே நடக்கிறது


கல்யாணராமன் மறைமலை நகர்
ஆக 12, 2024 19:07

பின்னே, கள்ளச்சாராயம் குடிப்பவன் தியாகி. 10 என்ன 25 லட்சம் கூட குடுப்போம். கள்ளச்சாராயம் விற்பவன் பூரா பயலும் எங்க கட்சிக்காரன். அவனுக்கு வியாபாரம் ஆனா தலைமை குடும்பத்துக்கு கட்சிக்கு வருமானம். டிரைவராலும், எலக்ட்ரிஷியனாலும் எங்களுக்கு என்ன லாபம்?


பேசும் தமிழன்
ஆக 12, 2024 18:18

விடியாத ஆட்சியில்... கள்ள சாராயத்தை குடித்து விட்டு உயிரிழந்தாள்......10 லட்சம்.... பணியின் போது உயிரிழந்த ஆளுக்கு 3 லட்சம் ....விளங்கிடும் ......இதற்கு பேசாமல் கள்ளசாராயத்தை குடித்து விட்டு உயிரை விட்டு இருக்கலாம் என்று இறந்தவரின் ஆன்மா நினைக்கக்கூடும் !!!


nagendhiran
ஆக 12, 2024 17:52

மின்சார இறப்புக்கு 3 லட்சம்? கல்ல சாராய இறப்புக்கு பத்து லட்சம்? விடியலை அனுபவீங்க?


D.Ambujavalli
ஆக 12, 2024 16:42

உயிர் நீக்கும் நிலையிலும் பேருந்தை ஓரம் கட்டி பயணிகளை காத்த ட்ரைவர் குடும்பத்துக்கும் 3 லட்சம்தான் இதற்கெல்லாம் funds இருக்காது கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களின் குடும்பமே அதிர்ஷ்டசாலிகள்


மேலும் செய்திகள்