உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தேசிய திருவிழாவாக திகழும் கும்பமேளா: ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பாராட்டு

தேசிய திருவிழாவாக திகழும் கும்பமேளா: ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பாராட்டு

திருச்சி: ''இந்திய ஒருமைப்பாட்டுக்கும், கலாசார பாரம்பரியத்திற்கும், சேவை மனப்பான்மைக்கும் சிறந்த உதாரணமாக, தேசிய திருவிழாவாக கும்பமேளா நடைபெறுகிறது,'' என, ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தெரிவித்தார்.உத்தரபிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் நடைபெறும் மஹா கும்பமேளாவில் பங்கேற்ற, காஞ்சி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், நேற்று முன்தினம் இரவு, தனி விமானத்தில் திருச்சி வந்தார். அவர் கூறியதாவது:நம் கோயில்களில் பட்ஷகங்கா, சிவகங்கா, புஷ்கரணி, அக்னி தீர்த்தம் போன்றவற்றில் புனித நீராடுகிறோம். ஹரித்துவார், உஜ்ஜயினி, நாசிக், பிரயாக்ராஜ் போன்ற இடங்களில் மஹா கும்பமேளா நடைபெறுகிறது.உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில், போகி தினத்தன்று துவங்கி, சிவராத்திரி வரை நடைபெறும் கும்பமேளா விசேஷமானது.பிரயாகம் என்பது மிக உயர்ந்த யாகம். கங்கை என்பது ஓங்காரத்தின் உருவம். கங்கை, யமுனை, சரஸ்வதி மூன்றும் சேர்ந்து ஓங்காரத்தின் உருவமாக திகழ்வதால், அதில், புனித நீராடுவதால் தெரிந்தோ, தெரியாமலோ செய்த தோஷங்கள் நீங்கும். உயர்ந்த புண்ணியம் கிடைக்கும் என்று,வேதம் சொல்கிறது.வேதத்தில், கங்கையின் சிறப்பு சொல்லப்பட்டுள்ளது. வேதம் என்பது எழுதா கிழவி; இறைவனின் மூச்சுக்காற்றாகவும் திகழ்கிறது. சரஸ்வதி நதியில் நீராடினால் புகழ் கிடைக்கும்.பொதுவாக, ஆறுகள் கடலில் கலக்கும். ஆனால், மக்கள் கடல் ஆறுகளில் கலப்பது தான் கும்பமேளா.தற்போது நிகழ்ந்த கும்பமேளாவில், 52 கோடி மக்கள் புனித நீராடி உள்ளதாக, அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.மக்கள் மனதில் பக்தி நெறி ஆழமாக வேரூன்றி இருப்பதை எடுத்துக்காட்டும் விதமாக, கோடான கோடி மக்களை நேரடியாக கும்பமேளாவில் காண முடிகிறது. இந்த கும்பமேளாவில் தென்னாட்டில் இருந்தும், காசி தமிழ் சங்கம் மூலமாகவும் நிறைய பேர் பங்கு பெற்று, புனித நீராடி யாகங்கள் செய்துள்ளனர்.இந்திய ஒருமைப்பாட்டுக்கும், கலாசார பாரம்பரியத்திற்கும், சேவை மனப்பான்மைக்கும் சிறந்த உதாரணமாக, தேசிய திருவிழாவாக கும்பமேளா நடைபெறுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Rasheel
பிப் 25, 2025 21:32

கோடி கணக்கான மக்களின் நம்பிக்கையே நன்மையை தரும். சனாதனத்தில் பாவ மன்னிப்பு என்ற கோளாறு இல்லை. ஆன்மாவின் விடுலையே அதன் வழியாகும்.


RAMAKRISHNAN NATESAN
பிப் 25, 2025 09:37

அத்தி வரதர் ...... கும்ப மேளா ..... காசி தமிழ்ச் சங்கமம் ....சபரிமலை ..... இப்படி சொல்லிக்கொண்டே போகலாம் ..... இவை அனைத்துமே தேசிய திருவிழாக்கள் .... ஆனா இந்த சமாச்சாரமெல்லாம் ஹிந்துக்களை ஒற்றுமைப்படுத்த உதவுது .... மதமாற்றத்தில் உள்ள நாட்டத்தைப் போக்குது ..... அனைவரையும் சகோதர்களாகப் பார்க்கும் உணர்வை ஏற்படுத்துது .... தேசம், கடவுள் மீது நாட்டத்தைக் கொடுக்குது .... அந்த போதையே போதும் ன்னு நினைக்க வைக்குது ... அதனாலதான் இவை அனைத்தும் துக்கடா துக்கடா கேங், வெள்ளை அங்கி கேங் கிற்கு எரிச்சலை, கோபத்தை ஏற்படுத்துது ....


Velan Iyengaar
பிப் 25, 2025 08:22

சௌக்கியமா ??


Sampath Kumar
பிப் 25, 2025 08:11

தேசிய திரு விழா சரி இந்த திரு விழா நடத்தி இந்த புனித நதியை மாசு பட்டதாக சொல்கிறார்களே ! இதை என்ன சொல்வது சாமி ??


Barakat Ali
பிப் 25, 2025 10:33

நம்ம மனசு எப்படி சம்பத் சாமி ???? எப்பவும் புனிதமான எண்ணங்கள்தான் உதிக்குதா ????


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை