உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பகுதி நிலங்கள் போலி பட்டா மூலம் அபகரிப்பு

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பகுதி நிலங்கள் போலி பட்டா மூலம் அபகரிப்பு

மதுரை: மதுரை தோப்பூர் எய்ம்ஸ் மருத்துவமனை பகுதி நிலங்களுக்கு மவுசு அதிகரித்துள்ள நிலையில், போலி பட்டா மூலம் நிலங்களை அபகரிக்கும் முயற்சி நடந்து வருகிறது. ரூ.2 கோடி மதிப்புள்ள தனது நிலங்களை போலி பட்டா மூலம் அபகரித்துள்ளதாக பாதிக்கப்பட்ட முன்னாள் ராணுவ வீரர் லஞ்சஒழிப்பு போலீசில் புகார் செய்துள்ளார்.எய்ம்ஸ் மருத்துவமனை, மெட்ரோ ரயில் ஸ்டேஷன் என அடுத்தடுத்து அமைவதால் திருமங்கலம், கப்பலுார், தோப்பூர் பகுதி நிலங்களுக்கு மவுசு அதிகரித்துள்ளது. தோப்பூர், கரடிக்கல், உரப்பனுார் பகுதிகளில் பொதுமக்கள் முதலீடாக வாங்கி கண்காணிக்காமல் வைத்திருக்கும் நிலங்களை போலி பட்டா, போலி பத்திரம் தயாரித்து அபகரிக்கும் முயற்சி நடந்து வருகிறது.திருமங்கலத்தைச் சேர்ந்தவர் தங்கம் 75. முன்னாள் ராணுவவீரரான இவர், 2014ல் சந்தோஷ்நகர், கோல்டன் சிட்டியில் 22 சென்ட் மதிப்புள்ள 3 பிளாட்டுகளை கிரையம் செய்து பட்டா பெற்றார். இவரது நிலத்திற்கு திருமங்கலம் பஞ்சாச்சரம் என்பவர் பட்டா தயாரித்து விற்றதாக நீதிமன்றத்தில் தங்கம் தொடர்ந்த வழக்கில் 6 மாதத்திற்குள் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது.இந்நிலையில் பஞ்சாச்சரம் தயாரித்த பட்டா அடிப்படையில் பத்திரம் பதிவு செய்து கொடுத்ததாக திருமங்கலம் சார்பதிவாளர் பாண்டியராஜன் மீது குற்றம்சாட்டியுள்ள தங்கம், லஞ்சஒழிப்பு போலீசிலும், பத்திரப்பதிவு ஐ.ஜி., தினேஷ் ஆலிவர் பொன்ராஜிடமும் புகார் அளித்துள்ளார்.அதில், மோசடி பட்டாவை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ள உயர்நீதிமன்ற மதுரை கிளை, 2 மாதத்திற்குள் நடவடிக்கை எடுக்க கலெக்டர், டி.ஆர்.ஓ.,வுக்கு உத்தரவிட்டது. இவ்விவகாரம் நீதிமன்றத்தில் உள்ள போது எவ்வித பரிவர்த்தனையும் செய்யக்கூடாது என ஆர்.டி.ஓ., மூலம் திருமங்கலம் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டது. ஆனாலும் மோசடியாக பத்திரப்பதிவு செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூ.2 கோடி. இதற்கு உடந்தையாக இருந்த சார்பதிவாளர் பாண்டியராஜன், பத்திர எழுத்தர் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.கடந்த மாதம் கிழவநேரியில் நிலம் வாங்கிய ஒருவருக்கு பத்திரம் பதிவு செய்து கொடுக்க ரூ.70 ஆயிரம் லஞ்சம் பெற்ற வழக்கில் பாண்டியராஜன் கைதானது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

Rangarajan Cv
மார் 13, 2025 17:53

Despite directions from court, these goons are not interested in listening to court. Difficult for common people.


Jagadeesan
மார் 13, 2025 13:44

ஏண் நிலப்பதிவு மாநில அரசிடமுள்ளது. அதன் மந்திரி ஆயிரக்கணக்கான ஆடுகளையும் கோழிகளையும் வெட்டி பிரியாணி போட்டாரே ஞாபகம் இருக்கா?.அதற்கெல்லாம் நிதி வசதி எப்படியோ?


Apposthalan samlin
மார் 13, 2025 13:00

அதனால் தான் எய்ம்ஸ் இன்னும் கட்டவில்லை .பிஜேபி அரசாங்கம் எவ்வளுவு மோசமானது என்பதை இதில் இருந்து தெரிந்து கொள்ளலாம் .


Sekar Spm
மார் 14, 2025 07:01

இதற்கும் பிஜேபிக்கும் என்ன சம்பந்தம். இதில் பிஜேபி மோசம் என்று, எவ்வாறு கண்டுபிடித்தாய் அதை தெரியப்படுத்து. உன்னைப் போன்று அறிவுகெட்ட குருட்டு கபோதிகள் இருக்கும் வரை, இந்த திருட்டு திராவிடர்களுக்கு கொண்டாட்டம்தான்.


Oru Indiyan
மார் 13, 2025 10:47

60 வருடங்களில் இந்த இரண்டு திராவிடிய கொள்ளையர்கள் பத்திர பதிவில் அடித்த கோடிகள் எவ்வளவு


GMM
மார் 13, 2025 10:08

தமிழகத்தில் வீடு, நிலம் திராவிடர் ஆசிர்வாதம் இல்லாமல் காப்பது கஷ்டம். பத்திர பதிவு, பட்டா, வீடு வரி மோசடிகள் சாகசம். திமுக ஆட்சிக்கு பிந்தைய பதிவுகள் அனைத்தையும் புதுப்பிக்க வேண்டும். நிலம் மாநில நிர்வாகம் பொறுப்பு என்று மத்திய அரசு விலகுவது சரியல்ல. வழக்கில் பிறழ் வாதம், முரண் மனு தயாரிக்கும் வக்கீல் தண்டிக்க மத்திய அரசு அமைப்பு தேவை.


Sudhakar
மார் 13, 2025 09:49

செங்கல் திருடன்


karthik
மார் 13, 2025 09:01

ஒருத்தன் செங்கலை திருடிக்கொண்டு போனான்.. இவனுங்க நிலத்தையே திருடுறானுங்க..


ganesh karthik
மார் 13, 2025 08:20

ஐயோ, திராவிட மாடல் ஒன்றும் செய்யவில்லை. சட்டத்தின் ஓட்டையை சார்பதிவாளர் படித்து விட்டார். அவரை ஒன்றும் செய்ய இயலாது


oviya vijay
மார் 13, 2025 08:10

எல்லாம் அந்த ஒற்றை செங்கல் அயோகியர் வேலை. எத்தற்கு எத்தன்


Minimole P C
மார் 13, 2025 07:39

This is already late to segregate the revenue department in to three, that one has to maintain the land records including Govt. lands and another one has to field verify and give recommendation for change if any and the last one has to issue patta etc. All three have to come under different RDOs. It is very funny that one deparment does every thing and does lot of corruption. Already an ordinary assistant in revenue department whose networth varies from 20 to 30 crores depending upon the place of posting.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை