உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு: முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை

சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு: முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை

சென்னை: சென்னை தலைமை செயலகத்தில், சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு தொடர்பாக, அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.திமுக அரசின் முதல்வரிடம் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க வலியுறுத்தி எந்த பயனும் இல்லை. திமுக ஆட்சியில் தமிழகத்தில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை என அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிசாமி குற்றம் சாட்டி வருகிறார். சில தினங்களுக்கு முன்பு, பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் 6 பேர் கொண்ட கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=srmfvom1&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0சென்னை தலைமை செயலகத்தில், இன்று (ஜூலை 09) சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு தொடர்பாக, அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். கூட்டத்தில், தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா, உள்துறை செயலாளர் அமுதா, டி.ஜி.பி., சங்கர் ஜிவால், சென்னை போலீஸ் கமிஷனர் அருண் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள் நடந்து வருவதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டதாக தகவல் வெளியாகிஉள்ளது.

ஆம்ஸ்ட்ராங் மனைவியிடம் ஸ்டாலின் உறுதி

படுகொலை செய்யப்பட்ட,பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் வீட்டிற்குச் சென்ற முதல்வர் ஸ்டாலின், அவரது திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தார். பின்னர் அவர் ஆம்ஸ்ட்ராங் மனைவி மற்றும் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். ''கொலை குற்றத்தில் ஈடுபட்டவர்கள் அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர். குற்றவாளிகள் அனைவருக்கும் தண்டனை நிச்சயம் கிடைக்கும்'' என ஆம்ஸ்ட்ராங் மனைவியிடம் முதல்வர் ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார். இது குறித்து எக்ஸ் சமூகவலைதளத்தில் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலைக் குற்றத்தின் பின்னணியில் இருப்பது யாராக இருந்தாலும் அவர்களைக் கண்டறிந்து தண்டிப்பதில் எனது அரசு உறுதியாக உள்ளது. இது அனைவருக்குமான அரசு. அனைவரையும் அரவணைத்து எளியோர் நலன் காக்கும் அரசு, நீதியை நிச்சயம் நிலைநாட்டும்! காவல்துறை பாரபட்சமின்றி நெஞ்சுரத்தோடு கடமையை ஆற்றும்!. இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

Premanathan Sambandam
ஜூலை 10, 2024 12:01

ஆலோசனையிலேயே இன்னும் இரண்டு வருடம் போய்விட்டால் எப்போது நடவடிக்கை எடுப்பது?


A
ஜூலை 09, 2024 19:00

Comedy Time


krishna
ஜூலை 09, 2024 17:47

UDAN AAYUTKAALA GOPALAPURAM KOTHADIMAI VENU VANDHU KADHARAVUM.SARVADHIKARI ALOHANAIKKU PIN THAMIZHAGAM AMAIDHIPOONGA AAGI VITTADHU.PAALAARUM THENAARUM OODUDHU.


D.Ambujavalli
ஜூலை 09, 2024 16:47

பாவம், இத்தனை அழுத்தங்களுக்கிடையே கொஞ்சம் காமெடியும் செய்கிறாரே , கொலையாளிகளை இவர் எங்கிருந்தோ தேடிப் பிடிக்கப்போகிறாராம் போலீசுக்குத் தெரியாதாம் கதை எழுதப்போகலாம் அந்தக் கொலையாளிகள், வன்முறையாளர்களெல்லாம் உங்கள் கஸ்டடியில் கட்சிப் பிரமுகர்களாக வலம் வருவார்களே, அவர்களை உங்கள் போலீஸ் பிடிக்குமா ?


Anand
ஜூலை 09, 2024 16:18

காவல் துறைக்கு சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு பற்றி உன்னோட ஆலோசனை தேவையில்லை, ஒரு தடவை, ஒரே ஒரு தடவை காவல் துறையை பார்த்து சட்டம் ஒழுங்கை நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள் நான் தலையிடமாட்டேன் என கூறினால் போதும், அவர்கள் பார்த்துக்கொள்வார்கள்......


Lion Drsekar
ஜூலை 09, 2024 16:14

சட்டம் அதை அவரவர்கள் பார்த்துக்கொள்வார்கள் , நம் முதல்வர் படத்தில் நடிக்கலாம் வயதானால் எல்லோரும் தோற்றம் மாறி தடுமாறுவார்கள், நாள் நம் முதல்வர் நாளுக்கு நாள் இளவயவராக இருக்கிறார், போகிற போக்கில் இளைஞர் அணிக்கு தலைவராக ஆனாலும் ஆகலாம் அப்படி ஒரு இளமை, பாராட்டுக்கள், அதுவும் உள்நாட்டிலேயே முழுக்கால் பாண்ட் அணிந்து நிகழ்ச்சிகளில் பெங்கேற்பது பாராட்டப்படவேண்டிய ஒன்று, பல்லாண்டு வாழ்ந்து மக்களுக்கு பல நன்மைகளை செய்யவேண்டும் என்று வேண்டுகிறோம், வந்தே மாதரம்


krishna
ஜூலை 09, 2024 15:11

SATTAM OZHUNGU PRACHNAYE DRAVIDA MODEL THIYAMUKA KUMVAL ENA ELLORUKKUM THERIUM.MUDHALIL ADHAI PAARUNGA THUNDU SEATTU.SUMMA MAAN SARVAADHIKARI AAGA MAARUVEN IRUMBU KARAM KONDU ADAKKUVEN ENA KADHARUVADHAI PAARTHU UNGA KUMBALE SIRIKKUDHU.NAARI KEDAKKU THAMIZHAGAM.KOMALAI ARASAANDAAL ARANMANAI CIRCUS KOODARAMAAGA MAARUM.


GMM
ஜூலை 09, 2024 14:56

சட்டம் ஒழுங்குக்கு / போலீசாருக்கு முதலில் பாதுகாப்பு. அதன் பின் மக்களுக்கு பாதுகாப்பு. பொறுப்பை மத்திய அரசின் கீழ் ஒப்படைக்க வேண்டும். அல்லது தினமும் ஆலோசனை கூட்டம் மட்டும் தான் நடத்த முடியும். வன்முறையாளர்கள் மாநில அரசுகளின் கீழ் வலுவான நிர்வாகம் / நடவடிக்கை இருக்காது என்று புரிந்து கொண்டு செயல்பட்டு வருவதை தவிர்க்க வேண்டும்.


saravan
ஜூலை 09, 2024 14:23

ஒருவேளை வீட்டுக்கு ஒரு இம்ம்பு கரம் கொடுப்பங்களோ...


RAMAKRISHNAN NATESAN
ஜூலை 09, 2024 14:11

நான் அதுக்கு சரிப்படமாட்டேன் ன்னு தெரிஞ்சே பதவியில் தொடருகிறேன் .....


மேலும் செய்திகள்



புதிய வீடியோ