உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / உள்ளாட்சிகளை தரம் உயர்த்த சட்ட திருத்தம்: அமைச்சர் நேரு

உள்ளாட்சிகளை தரம் உயர்த்த சட்ட திருத்தம்: அமைச்சர் நேரு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சட்டசபையில், இந்திய கம்யூனிஸ்ட் - ராமச்சந்திரன் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து அமைச்சர் நேரு கூறியதாவது:மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில், பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்த முதல்வர் உத்தரவிட்டுள்ளார். நாளை சட்டசபையில் சட்ட திருத்தம் கொண்டு வர உள்ளோம். ஏற்கனவே உள்ளாட்சிகளை தரம் உயர்த்த, மக்கள் தொகை எவ்வளவு இருக்க வேண்டும்; வருவாய் எவ்வளவு இருக்க வேண்டும் என, நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.புதிய சட்டத் திருத்தத்தில், தேவையான இடத்தில், நகராட்சியாக, மாநகராட்சியாக தரம் உயர்த்த அரசுக்கு அதிகாரம் அளிக்கப்பட உள்ளது. சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்ட பின், உங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படும்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Kasimani Baskaran
ஜூன் 28, 2024 05:13

கொள்ளையடிக்க புதுப்புது திட்டங்கள். ஏழைகள் என்றால் சம்பாதிப்பதில் பாதியை சாராய பாக்கெட் காரன் சாப்பிட்டு விடுவான். மேத்தியை வைத்து வெறும் கனவோடுதான் பலர் வாழ்கிறார்கள். பிள்ளைகளாவது படித்து முன்னேறி விடுவார்கள் என்றிருந்தால் அவர்களுக்கும் கஞ்சா, டாஸ்மாக் போன்ற கெடுதல்கள்... கடைசியில் முன்னேறியது சாராயக்கடை நடத்துவோர், சீமை அல்லது நாட்டுச்சாராயம் காய்ச்சும் தொழில் செய்வோர் மற்றும் அரசியல்வாதிகள்தான்... ஏழைகள் நக்கிக்கொண்டுதான் போகவேண்டும்..


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை