உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / உள்ளாட்சி தேர்தல் வாக்காளர் பட்டியல்: மாநில தேர்தல் கமிஷன் உத்தரவு

உள்ளாட்சி தேர்தல் வாக்காளர் பட்டியல்: மாநில தேர்தல் கமிஷன் உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருப்பூர் : உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடத்தும் வகையில், வார்டுவாரியான வாக்காளர் பட்டியலை சமர்ப்பிக்க, மாநில தேர்தல் கமிஷன் அறிவுறுத்தியுள்ளது.மாநில தேர்தல் கமிஷன் செயலாளர் பாலசுப்ரமணியம், முதன்மை வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் மாவட்ட வாக்காளர் பதிவு அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை:தமிழகத்தில் காலியாக உள்ள உள்ளாட்சி அமைப்புகளின் பதவிகளுக்கு விரைவில் தேர்தல் நடத்தப்படவுள்ளது. தேர்தலுக்கு முன் வாக்காளர் பட்டியல் தயார் செய்து வெளியிட வேண்டும். கடந்த லோக்சபா தேர்தலுக்கு முன் வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியல் விவரம்; பின்னர் மேற்கொள்ளப்பட்ட சேர்க்கை மற்றும் நீக்கம் விவரங்களுடன், வாக்காளர் படத்துடன் கூடிய, வார்டு வாரியான வாக்காளர் பட்டியல் தயார் செய்து வழங்க வேண்டும்.அதனடிப்படையில் மாநில தேர்தல் கமிஷன் உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலை தயார் செய்யும். உள்ளாட்சி தேர்தல் மனுத்தாக்கலுக்கு கடைசி நாள் வரையிலான மாற்றங்கள் ஏற்கப்பட்டு உரிய வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். தேர்தல் குறித்து அறிவிப்புகள் மாநில தேர்தல் கமிஷன் மூலம் வெளியிடப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.மாநில தேர்தல் கமிஷன் பிறப்பித்த இந்த உத்தரவையடுத்து வார்டு வாரியாக, புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் தயாரிக்க சரி பார்ப்பு பணிகளில், வேகம் காட்டி வருகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

தத்வமசி
ஜூலை 30, 2024 10:22

கடந்த பாராளுமன்ற தேர்தலில் எதிர்கட்சிகளுக்கு கூடுதலாக எங்கெங்கு ஓட்டுக்கள் விழுந்தன என்று பார்த்து வைத்துக் கொள்ளவும். பிறகு கோயம்புத்தூர் போல உள்ளடி வேலை செய்யலாம். தேர்தல் துறை மத்திய அரசை சார்ந்திருந்தாலும், வேலை செய்வது மாநிலத்தில் உள்ளவர்கள் தான்.


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை