உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வங்கக் கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி: தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்

வங்கக் கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி: தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: வரும் மே 22 ம் தேதி வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்திற்கு நாளை (மே 19) மற்றும் மே 20, 21 ஆகிய 3 நாட்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: வரும் மே 22 ம் தேதி வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. மே 24ம் தேதி மத்திய வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப் பெறக்கூடும். தமிழகத்திற்கு நாளை (மே 19) மற்றும் மே 20, 21 ஆகிய 3 நாட்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

18 மாவட்டங்களில் கனமழை

கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தென்காசியில் இன்று (மே 18) மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது. ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, தூத்துக்குடி, திருச்சி, ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, மதுரை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி ஆகிய 18 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது.

அரஞ்ச் அலர்ட்

தமிழகத்தில் நாளை (மே 19) திண்டுக்கல்,தேனி,தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 5 மாவட்டங்களில் கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மே 20 ம் தேதி விருதுநகர், திண்டுக்கல், திருப்பூர், கோவை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

ஆரூர் ரங்
மே 18, 2024 16:02

மழைநீர் வடிகால் திட்டங்கள் தொண்ணூறு விழுக்காடு முடிந்து விட்டதால் வெள்ள பாதிப்பு இருக்காது. இப்படிக்கு அனைத்து கழக உள்ளாட்சித் தலைவர்கள்.


kannan sundaresan
மே 18, 2024 15:58

தமிழக அரசு தகுந்த முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறோம்


Rengaraj
மே 18, 2024 15:42

கடந்த டிசம்பர் மாதம் இதே போன்று கலர் கலராக அலெர்ட் கொடுக்கப்பட்டது இன்று வரை வெள்ளநிவாரணம் விவகாரத்தில் மத்திய மாநில அரசுகள் ஒன்றை ஒன்று குறைசொல்லிக்கொண்டு இருக்கின்றன கடந்த முறை சென்னை மற்றும் நெல்லை, குமரி மற்றும் தூத்துக்குடி மக்கள் வெள்ளத்தில் அவதிப்பட்டனர் இம்முறை எந்த இடத்திலும் மக்கள் மழையால் கஷ்டப்படாமல் இருக்க வேண்டும் அரசாங்கம் ஆவண செய்ய வேண்டும்


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை