உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மாயாஜாலம் எடுபடாது தி.மு.க., அறிக்கை

மாயாஜாலம் எடுபடாது தி.மு.க., அறிக்கை

சென்னை:'நுாற்றுக்கு 100 பொய்யான கேள்விகளை தொடுத்து பொதுமக்களை திசை திருப்பும் பா.ஜ.வின் மாயாஜாலம் எடுபடாது' என தி.மு.க. தலைமை அறிவித்துள்ளது.தி.மு.க. தலைமையின் அறிக்கை:தி.மு.க.வின் 2021ம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என பா.ஜ. 100 கேள்விகளில் 43 வாக்குறுதிகளை குறிப்பிட்டுள்ளது. தி.மு.க. தேர்தல் அறிக்கையில் மக்களுக்கு தந்த வாக்குறுதிகள் 505. இவற்றில் உங்கள் கணக்குப்படி 43 வாக்குறுதிகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை.வாதத்திற்காக ஒப்புக் கொள்கிறோம். ஆனால் தி.மு.க. அளித்த வாக்குறுதி 505ல் இந்த 43 தவிர உங்க கணக்குப்படி எஞ்சிய 463 வாக்குறுதிகளும் நிறைவேற்றப்பட்டுள்ளன அல்லவா.ஜனநாயக முறைப்படி தேர்தல் அறிக்கையில் கூறப்படும் வாக்குறுதிகளை ஐந்து ஆண்டுகளில் நிறைவேற்ற வேண்டும். தி.மு.க. ஆட்சியின் ஐந்து ஆண்டுகளில் முடிந்திருப்பது மூன்று ஆண்டுகள் எஞ்சியுள்ள இரண்டு ஆண்டுகளில் மிச்சமுள்ள 43 கோரிக்கைகளையும் 2026ம் ஆண்டின் சட்டசபை தேர்தலுக்கு முன் நிறைவேற்றி விட்டு மீண்டும் தேர்தலில் போட்டியிடுவோம் நாங்கள்.ஆனால் 2014 தேர்தலுக்கு முன் நீங்கள் அளித்த வாக்குறுதிகளில் 10 ஆண்டுகள் ஆகியும் ஒன்றைக்கூட நிறைவேற்றாத உத்தமப் பொய்யர்கள் அல்லவா நீங்கள். நிறைவேற்றாத வாக்குறுதிகளை கூறி 100 முறை கேட்டோமே அதற்காக ஒரு முறையாவது பதில் சொன்னீர்களா? 100க்கு 100 பொய்யான கேள்விகளை தொடுத்து பொது மக்களை திசை திருப்பும் பா.ஜ.வின் மாயஜால வித்தைகள் எதுவும் இனி எடுபடாது. இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை