மேலும் செய்திகள்
பள்ளி பேருந்து சக்கரத்தில் சிக்கி 4 வயது குழந்தை பலி
1 hour(s) ago
சென்னை:அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், மாணவர் சேர்க்கையை அதிகரிக்க, பள்ளிக்கல்வித் துறை முயற்சி மேற்கொண்டுஉள்ளது. புதிய கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை பணிகள், கடந்த மார்ச்சில் துவங்கின. இதில், 3.24 லட்சம் மாணவர்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். மாணவர் சேர்க்கை குறைவாக உள்ள பள்ளிகளில், தேவையானதை விட, 2,236 ஆசிரியர்கள் கூடுதலாக உள்ளதை, தொடக்கக் கல்வி இயக்குனரகம் பட்டியல் எடுத்துள்ளது. இந்த உபரி ஆசிரியர்கள் பணியாற்றும் பள்ளிகளில், மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும் என்றும், அவ்வாறு அதிகரிக்காவிட்டால், சம்பந்தப்பட்ட ஆசிரியர்களுக்கு கட்டாய இடமாற்றம் இருக்கும் என்றும், தொடக்கக் கல்வி இயக்குனரகம் எச்சரித்துள்ளது.
1 hour(s) ago