உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பண்ருட்டி பாலிடெக்னிக்கில் மாதா பிறந்த நாள் ஊர்வலம் அரசு உத்தரவை மீறியதால் புது சர்ச்சை

பண்ருட்டி பாலிடெக்னிக்கில் மாதா பிறந்த நாள் ஊர்வலம் அரசு உத்தரவை மீறியதால் புது சர்ச்சை

பண்ருட்டி:கடலுார் மாவட்டம், பண்ருட்டி அடுத்த அங்குசெட்டிப்பாளையத்தில், அன்னை வேளாங்கண்ணி பாலிடெக்னிக் கல்லுாரியில் நேற்று முன்தினம் வேளாங்கண்ணி மாதா பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. அதுவும், கல்லுாரி வேலை நேரமான காலை, 10:00 மணிக்கு விழா துவங்கியது. விழாவிற்கு கல்லுாரி செயலர் யேசுதங்கம் தலைமை தாங்கினார்.தமிழக அரசின் உத்தரவை மீறி நடந்த இந்நிகழ்ச்சியின் வீடியோ, சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சர்ச்சையான இந்த வீடியோவில், 'சென்னைக்கு பொங்குகின்ற சிலர், பல்வேறு கல்லுாரிகளில் நடக்கின்ற அநியாயங்களை கண்டும், காணாமல் இருப்பது நகைப்புக்குரியது. 'பக்கத்திலே இருக்கக்கூடிய அங்கு செட்டிப்பாளையம் அன்னை வேளாங்கண்ணி தொழில்நுட்பக் கல்லுாரியில் ஹிந்து, முஸ்லிம் உள்ளிட்ட மாணவ - மாணவியரை கல்லுாரியில் பணிபுரியும் பேராசிரியர்களை கட்டாயப்படுத்தி, கல்லுாரி நேரத்தில் மாதா சிலையை ஊர்வலமாக கல்லுாரி வளாகம் முழுதும் எடுத்து வலம் வருவது எந்த விதத்தில் நியாயம். இதற்கு உயர்கல்வித் துறை அமைச்சர் பொங்கமாட்டாரா' என, கேள்வி எழுப்பியுள்ளனர். கல்வி நிறுவனங்களில், கல்விக்கு தொடர்பில்லாத நிகழ்ச்சிகள் எதையும் நடத்தக்கூடாது என, தமிழக அரசு விதித்துள்ள தடையை மீறி நடந்துள்ள வேளாங்கண்ணி மாதா பிறந்த நாள் விழா புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.இதற்கிடையில், 'வேளாங்கண்ணி மாதாவை தோளில் சுமந்து, கல்லுாரி முழுக்க சுற்றிவர வைத்த, தொழில்நுட்பக் கல்லுாரி மீது அரசு நடவடிக்கை எடுக்குமா' என, ஹிந்து தமிழர் கட்சி தலைவர் ராம.ரவிக்குமார் கேள்வி எழுப்பி உள்ளார்.'பள்ளிகளில் மதம் சார்ந்த எந்த கருத்துக்களும் பேசக்கூடாது என, அமைச்சர் மகேஷ் கூறுகிறார். விநாயகர் சதுர்த்தி விழா பள்ளிகளில் கொண்டாடக் கூடாது. ஆனால், அன்னை வேளாங்கண்ணியை துாக்கி சுமப்பது நியாயமா? இது மறைமுகமான மதமாற்றத்திற்கு வழிவகுக்காதா? அந்த கல்லுாரி நிர்வாகத்தின் மீது தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது? கல்வி காவிமயமாகி விடக்கூடாது என கருத்து தெரிவிப்போர், வேளாங்கண்ணி தெய்வத்தை துாக்கி சுமக்கும், தொழில்நுட்பக் கல்லுாரி குறித்து என்ன கருத்து சொல்லப் போகின்றனர் என பார்ப்போம்' என்றும், அவர் தெரிவித்து உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

panneer selvam
செப் 08, 2024 23:46

Dravidian knows the political winning formula by divided Hindus whom shall be fooled easily while pampering unified minorities for their vote banks .


karthi
செப் 08, 2024 14:04

இந்து மதத்தை மட்டுமே குறி வைத்து செயல்படுகின்றனர். ஆட்சி மாறினால்தான் தீர்வு கிடைக்கும். அமைச்சகர் இதுவரை வாய் திறந்ததாகத்தெரியவில்லை.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை