| ADDED : மே 24, 2024 04:08 AM
தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில், 'பி.ஏ., தொழிலாளர் மேலாண்மை, எம்.ஏ., தொழிலாளர் மேலாண்மை, பி.ஜி.டி.எல்.ஏ., தொழிலாளர் சட்டங்களும், நிர்வாகவியல் சட்டமும்' படிப்புகள் நடத்தப்படுகின்றன. பி.ஏ., தொழிலாளர் மேலாண்மை பட்டப்படிப்புக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு முடிந்த நிலையில், விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கடைசி நாள், மே 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் விபரங்களுக்கு, தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையம் இணை பேராசிரியர் ரமேஷ்குமாரை, 9884159410 என்ற மொபைல் எண்ணிலும், 044 - 29567885, 29567886 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.________________தமிழகத்தில், அடுத்த மாதம் முதல் குறுவை சாகுபடி துவங்குகிறது. அதற்கான பணிகளில் விவசாயிகள் ஆயத்தமாகி வருகின்றனர். விவசாய வேலை செய்யும்போது, மின்கம்பிகள் தாழ்வாக இருந்தால், அவசர உதவிக்கு, 94987 94987 என்ற எண்ணில் அழைக்கலாம் அல்லது, '' என்ற 'எக்ஸ்' தளத்தில் புகார் அளிக்கலாம் என, மின்வாரியம் தெரிவித்து உள்ளது.