உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / செய்திகள் சில வரிகளில்

செய்திகள் சில வரிகளில்

பள்ளி கல்வித்துறை, பிளஸ் 1 மாணவர்களுக்கான தமிழ் திறனறி தேர்வை, அக்., 19ல் நடத்த உள்ளது. இதில் பங்கேற்க, www.dge.tn.gov.inஎன்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து, 50 ரூபாய் கட்டணத்துடன், தலைமை ஆசிரியர் வாயிலாக, வரும், 19ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். தேர்வாகும், 1,500 மாணவர்களுக்கு, மாதம், 1,500 ரூபாய் வீதம், இரண்டு ஆண்டுகளுக்கு உதவித்தொகை கிடைக்கும்.நாட்டில் பதிவு செய்ய தகுதியான அனைத்து டாக்டர்களும், தங்களின் எம்.பி.பி.எஸ்., பட்ட சான்றிதழின் டிஜிட்டல் நகல், மாநில மருத்துவ கவுன்சில், இந்திய மருத்துவ கவுன்சில் சான்றிதழ்கள் உள்ளிட்ட விபரங்களை, தேசிய மருத்துவ சட்டப்படி, தேசிய மருத்துவ பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும் என, தேசிய மருத்துவ ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.இளநிலை கால்நடை மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு, சென்னை கால்நடை மருத்துவ கல்லுாரியில் நாளை வரை நடக்கிறது. சிறப்பு பிரிவு, அரசு பள்ளி மாணவர்களுக்கான, 7.5 சதவீத ஒதுக்கீட்டுக்கு நேரடியாக நடக்கிறது. பொதுக்கலந்தாய்வு, www.adm.tanuvas.ac.in மற்றும் www.tanuvas.ac.in என்ற இணையதளங்கள் வாயிலாக நடக்க உள்ளது. அதற்கான பதிவு மற்றும் விருப்ப கல்லுாரி பதிவு, 7ம் தேதி வரை நடக்க உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை