உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மேட்டூர் அணை நீர்வரத்து 22,200 கனஅடியாக சரிவு

மேட்டூர் அணை நீர்வரத்து 22,200 கனஅடியாக சரிவு

மேட்டூர்:மேட்டூர் அணை நீர்வரத்து வினாடிக்கு, 22,200 கனஅடியாக சரிந்தது.மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம், 120 அடி. நீர் இருப்பு, 93.47 டி.எம்.சி., கர்நாடகா அணைகளில் திறக்கப்பட்ட உபரிநீர் தொடர்ச்சியாக வந்ததால் கடந்த, 30ல் மேட்டூர் அணை நிரம்பியது. அணையில் இருந்து, 16 கண் மதகு வழியே உபரி நீர் காவிரியாற்றில் வெளியேற்றப்பட்டது. தொடர்ந்து, 8 நாட்களாக உபரிநீர் வெளியேறும் நிலையில் கர்நாடகா அணைகளில் திறக்கப்பட்ட உபரிநீர் அளவு படிப்படியாக குறைந்தது.அதற்கேற்ப நேற்று முன்தினம் காலை, வினாடிக்கு, 73,330 கனஅடியாக இருந்த அணை நீர்வரத்து, மதியம், 60,273 கனஅடி, இரவு, 50,000 கனஅடியாக குறைந்தது. நேற்று காலை, 26,000 கனஅடி, மாலை, 22,200 கனஅடியாக மேலும் சரிந்தது. இதனால், மின் நிலையங்கள் வழியே நீர்திறப்பு, 17,500 கனஅடியாகவும், 16 கண் மதகு வழியே உபரிநீர் திறப்பு, 4,500 கனஅடியாகவும் வெளியேற்றப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











முக்கிய வீடியோ