உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / எம்.ஜி.ஆர்., அம்மா தி.மு.க., ஐந்து தொகுதிகளில் போட்டி

எம்.ஜி.ஆர்., அம்மா தி.மு.க., ஐந்து தொகுதிகளில் போட்டி

அவனியாபுரம்: லோக்சபா தேர்தலில் ஐந்து தொகுதிகளில் போட்டியிட இருப்பதாக, ஜெ., மகள் எனக் கூறிக்கொள்ளும் எம்.ஜி.ஆர்., அம்மா திராவிட முன்னேற்ற கழக நிறுவனர் ஜெயலட்சுமி தெரிவித்தார்.தேனியில் போட்டியிட மனுத்தாக்கல் செய்வதற்காக நேற்று மதுரை விமானம் நிலையம் வந்தார்.அவர் கூறியதாவது: தேனி, கோவை, திருச்சி, திருநெல்வேலி, சேலம் தொகுதிகளில் சுயேச்சையாக போட்டியிட உள்ளேன். யாரும் ஆதரவு தரவில்லை. எனது அம்மா (ஜெயலலிதா) ஆசையை நிறைவேற்ற அரசியலுக்கு வந்தேன். தேனி எங்கம்மாவுக்கு பிடித்த தொகுதி. எனவே சென்டிமென்ட்டாக அங்கு போட்டியிடுகிறேன். தேனியில் யார் போட்டியிட்டாலும் பிரச்னை இல்லை. அவர்களுக்கு நான் பெரிய போட்டியாளராக இருப்பேன்.இரட்டை ரோஜா சின்னம் கேட்டிருக்கிறேன். ஜெயலலிதா கட்டிக்காத்த கட்சி தற்போது நான்காக சிதறி விட்டது. மக்களிடம் அதிருப்தியாக உள்ளது. அதனால் மக்கள் விரும்பி கேட்டதால்தான் தேனியில் போட்டியிடுகிறேன். மரபணு சோதனை தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது. தீர்ப்பு வந்த பின் தான் தெரியும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை